21 ம் நூற்றாண்டில் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக உருவாக வேண்டும் மற்றும் கல்வித் திறமையுள்ள மனிதவளத்துடனான எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டும்.
உயர் கல்வி மற்றும் தொழில்முறை கல்விக்கான அடிப்படை நோக்கம் செல்வந்தர்களின் விரைவான முன்னேற்றத்தை மட்டும் அல்ல, சமுதாயத்தின் கடைசியில் கடைசியாக இருந்த மனிதரை மேம்படுத்துவது ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மற்றும் தனியார் துறை சம்பந்தப்பட்டது. இது மேலும் அதிகரிக்கும்.
இது ஏதோ கல்வியாளர் எழுதிவைத்தது அல்ல. மாறாக, 2014 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் ஆகும்.
|
;வருடம்
|
கல்விக்காக மத்திய அரசு செலவழித்த தொகை
|
|
|
|
மொத்த
பட்ஜெட்டில் (சதவீதம்)
|
மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் (சதவீதம்)
|
|
2013-14
|
4.57
|
0.63
|
|
2014-15
|
4.14
|
0.55
|
|
2015-16
|
3.75
|
0.50
|
|
2016-17
|
3.65
|
0.49
|
|
2017-18
|
3.71
|
0.47
|
கடந்த 50 ஆண்டு காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு
என்பது மரியாதைக்குரிய டி.எஸ். கோத்தரி அவர்கள் முன்மொழிந்ததைப் போன்று 6 சதவீதத்தை ஒதக்கிட வலியுறுத்தி
வந்துள்ளோம். ஆனால், கடந்த 2017 பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சர் பிரகா~; ஜவடேஹர் அவர்கள் மத்திய மற்றும் மாநில் அரசுகள் சேர்ந்தே
கல்விக்காக வெறுமனே 4.5 சதவீதம் தான் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் செலவு செய்துவருகிறது என்பதாகும். இருந்தபோதும் கூட, 2016-17 ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு குறிப்பிடுவது என்னவென்றால் 2.09 வதமான நிதி மட்டுமே செலவழிக்கப்பட்டதாக புள்ளிவிபரம்
கூறுகிறது.
உயர்கல்வியில் சீர்திருத்தம் என்ற பெயரிலும், நெறிமுறைப்படுத்துதல் என்ற பெயரிலும் பல்கலைகழக மானியக்குழுவின் வழியே ஏற்கனவே இருக்கின்ற விதிமுறைகளை
திருத்தி கடுமையாக்குவதன் வழியே உயர்கல்விபெறும் உரிமையை மட்டுப்படுத்துகிற பணியை இந்த காலகட்டத்தில் நடந்துள்ளது. குறிப்பாக, 2016 ம்ஆண்டு ஆய்வு மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளை கடுமையாக்கியதன் விளைவாக மத்திய பல்கலைகங்களில் பெருவாரியாக
மாணவர் சேர்க்கை 2017-18 கல்வியாண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுவரை இருந்த நுழைவுத்தேர்வு முறை, நேர்முகத்தேர்வு முறையில் முன்பிருந்ததைவிட சிக்கலான
வழிகாட்டுதல்களை உருவாக்கியிருப்பது என்பது இந்த ஆண்டு மத்திய பல்கலைகழகங்களில் நடந்த மாணவர் சேர்க்கையில் கடந்த காலத்தை விட கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின்
எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2016 ம்ஆண்டு திருத்தப்பட்ட யூஜிசி விதியால் பாதிக்கப்பட்ட காயத்தின’ தழும்புகள் மறைவதற்கு முன்பாகவே 2017 ம் ஆண்டு மீண்டும்
பல்கலைகழகங்களின் செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம், ஆய்வு முறைமைகள்,
வெளிநாட்டு கல்விநிறுவனங்னளுடன் கல்வித்துறை தொடர்பான
ஒப்பந்தங்கள், இந்துத்துவா நிகழ்ச்சியை வலுப்படுத்துகிற ஆய்வு முறைமை போன்றவற்றின் அடிப்படையிலான புதிய திருத்தங்களை பின்பற்றுமாறு மத்திய மற்றும் மாநில பல்கலைகழகங்களுக்கு வழிகாட்டியுள்ளது.
கல்வி உரிமை மற்றும் ஜனநாயகரீதியான அணுகுமுறைக்கு எதிரான இந்த திருத்தங்களை 2017 மே மாதம் முன்மொழிந்த யூஜிசி, இதன் மீதான் கருத்து தெரிவிக்க கொடுத்த கால அவகாசம் வெறும் 14 நாட்கள் மட்டுமே. நாட்டிலிருக்கின்ற உயர்கல்வி
நிறவனங்கள் அனைத்தும் விடுமுறைவிட்ப்பட்ட சூழலில் ஒரு நெகிழ்வுதன்மையற்ற செயல்பாட்டை பின்பற்றியிருப்பது இந்திய உயர்கல்வி வளாச்சிக்கு உகந்தது இல்லை என்பது தான் கல்வியாளர்கள், ஆசிரியர்-மாணவர் அமைப்பினர் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்ட
ஆகும். இவர்கள் முன்வைக்கின்ற ஆரோக்கியமான
விமர்வனங்களை உள்வாங்கிக்கொள்ளாமல் புறந்தள்ளுகிற ஏற்பாடால்
இந்தியாவில் கல்வியில் பரவலாக்கம் என்பது நிகழ வாய்ப்பில்லாமலே போகும் தற்போது யூஜிசி கொண்டு வந்துள்ள திருத்தத்தின்படி:
1. தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீடு குழுவின் பரிந்துரையின் பெயரில் பல்கலைகழகங்களை 3 வகைகளாக பிரிப்பது. அதன்படி, இந்தியாவிலுள்ள பல்கலைகழகங்களை முதல் வகை> இரண்டாம்
வகை> மூன்றாம் வகை பல்கலைகழகமாக
மாற்றுவது.
2. இந்திய பல்கலைகழகங்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
இவ்வாறாக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான திருத்தத்தின் மூலமாக இந்திய கல்வி சந்தையில்
அந்நிய மூலதனத்தை அனுமதிப்பது. இவற்றில்
கூட மூன்றாம் வகை பல்கலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
3. தனியார் உயர்கல்வி நிறுவனங்களை நிகர்நிலை
பல்கலைகழகமாக மாற்றுவதற்கான வழிமுறைகள்.
இந்த வழிகாட்டுதலின் பெரும்பான்மையான அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை நிகர்நிலை பல்கலைகழகமாக
மாற்றுவதன் மூலமாக, மாநில பல்கலைகழகங்களை சக்தியற்;றவையாக மாற்றும் முயற்சி அடங்கியுள்ளது. இதே வழிகாட்டலில் டி-நோவா பல்கலைகழகங்கள் உருவாக்கிட
வழிவகையை ஏற்படுத்தியுள்ளது யூஜிசி. இதன் அடிப்படையில் இதுவரை கல்விநிலையங்கள் நடத்தி அனுபவம் இல்லாதவர்கள் கூட துவக்கம் முதலே பல்கலைகழகம்
துவக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள
ஆபத்து என்னவெனில், கலாச்சார
பாரம்பரியம் போன்ற அம்சங்களின் வாயிலாக பிற்போக்கு சக்திகள் தனக்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை சோதித்து பார்க்க அரசு செலவையே பயன்படுத்த முழமையான
வாய்ப்பபுகள் உள்ளது. எடுத்துக்காட்டு,
சமஸ்கிருதம், சரஸ்வதி நதி உள்ளிட்ட
இந்துத்துவ கலாச்சார மீட்டெடுப்பு கோசங்களுக்கு
டி-நோவா என்ற வாதம் பயன்படும்.
4. மத்திய மாநில பல்கலைகழகங்களுக்கு தர வரிசை வழங்குவதற்கான வழிகாட்டுதல்
5. பல்கலைகழங்களில் ஆய்வு மாணவர் சேர்க்கைக்குரிய தகுதி குறித்த 2016 வழிகாட்டுதலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2016 ம் ஆண்டு ஆய்வு மாணவர் சோக்கையில்ட கொண்டு வந்த மாற்றங்கயே மிகவும் கடுமையானதாக
இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள
சூழலில், தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில தகுதித்தேர்வு தேர்ச்சியை
மையப்படுத்தியும், ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி இந்திய பல்கலைகழகங்களை 3 ஆக பிரிப்பது என்ற ஆலோசனையை
மையப்படுத்தியும் வரையறையை பல்கலைகழக மானியக்கழு
மீண்டும் விதிமுறைகளை
மற்றும் வழிகாட்டுதலை மாற்றியமைத்துள்ளது. அதன்படி, முதல் இரண்டு வகை பல்கலைகழகங்களில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்வதற்கு
தேசிய மற்றும் மாநில தகுதித்தேர்வு தேர்ச்சி
கட்டாயமில்லையாம். மாறாக, கிராமப்புற
மற்றும் பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினர்
பயிலுகின்ற மூன்றாம் தரப ல்கலையில்
சேர்வதற்கு கட்டாயம் தேசிய மற்றும் மாநில தகுதித்தேர்வு தேர்ச்சி
அவசியம் என்பதை 2017 திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் விளைவு பெரும்பாலான சமூக-பொருளாதார அளவுகோலில் பின்தங்கிய
மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேற்கண்ட
திருத்தங்கள் யாருடைய நலனிலிருந்து உருவாக்கப்பட்டது என்பது புரியவரும். பிஜேபி தலைமையிலான மத்திய அரசு கல்வியை மத்தியப்பட்டியலுக்கு கல்வியை கொண்டு சேர்க்க எடுக்கின்ற முயற்சியும், வகுப்புவாத மற்றும் வணிகமய மிசையை நோக்கி கல்வியை தீவிரப்படுத்துவதும் நம்மால் அறிய முடிகிறது.
2014 ல் தேர்தல் நடக்கின்ற போது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று இந்திய கல்வியையும், இந்திய ஆராய்ச்சிகளையும் உலகதரத்திற்கு முன்னேற்றுவோம், உலக கல்விநிறுவனங்களின் முதன்மை பட்டியலில்
இந்திய நிறுவனஙங்கள் இடம்பிடிக்க முயற்சி எடுப்போம் என்றார்கள் பாரதிய ஜனதா கட்சியினர். 3 ஆண்டுகள்
ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னும்
அறிவியல்பூர்வமான கல்வமுறையை மேம்படுத்துவமதற்கான எந்தவிதமான முன்முயற்சியும் எடுக்கவில்லை
என்பதை கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளின் வழியே அறிய முடியும். தற்போது டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையிலான
புதிய கல்விகொள்கை குழு உரவாக்கித்தந்த வரைவை இறுதிபடுத்த அறிவியல் விஞ்ஞானி
கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைத்துள்ளது. உண்மையாகச் சொன்னால் RSS வழிநடத்தும்
பாரதிய ஜனதா கட்சியால் மதவெறியைப்
பயன்படுத்தி கலகங்களை உருவாக்கத்தெரியுமே தவிர> அவர்களால்
இந்தியா சந்தித்து வருகிற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுகிற கல்விமுறையை
வடிவமைக்க இயலாது, மேலும் சிக்கல்படுத்தவே செய்திடும். இந்திய கல்வி இடர்பாடுகளுக்குள் சிக்கித்தவிக்கின்ற நிலையில்> அதை பாதுகாக்கின்ற வகையில் கல்வி மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களம் காண்பதே நமக்கு முன் இருக்கும்
கடமையாகும். ஏனென்றால் உயர்சாதி ஆதிக்கத்தை
நிலைநாட்ட பிராமணியம் பிறப்பின் அடிப்படையில்கட்டமைக்கப்பட்டது. தற்போது RSS கல்வி அமைப்பின் வாயிலாக உலகமய சூழலுக்க ஏற்றதான நவ-பிராமணிய கண்ணோட்டத்தை சமூகத்தில்
உருவாக்க முயலுகிறது.
கட்டுரையாளர்,
கி. மகாராஜ பாரதி
ஆய்வு மாணவர், மதுரை காமராஜர் பல்கலைகழகம்.