" நான் தேர்ந்தெடுக்கப்பட்டால்
சுத்தமான, நல்ல தரமான மாட்டிறைச்சி கடை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,"
என்று கேரளா மாநிலம் மலப்புறத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலின்
போது வாக்குறுதியளித்திருந்தார் பா.ஜ.க ன்
வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ். மாறாக, 2017 மே-27 ம் தேதி மத்திய அரசு மாடுகளை விற்பவரும்,
வாங்குபவரும் இறைச்சி தேவைக்காக பயன்படுத்தக்கூடாது என்று மாட்டிறைச்சிக்கான தடை உத்தரவை
பிறப்பித்தது. 2017 மே மாதம் முழுவதும் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் பரபரப்பாக
விவாதிக்கப்பட்ட, பேசப்பட்ட நிகழ்வான, சற்றேறக்குறைய அனைத்தும் மாட்டுக்கறி தொடர்புடைய
தாக்குதல்களே பெரும்பான்மையாக இருந்தது. ஜார்க்கண்ட மாநிலத்தில் பசு பாதுகாப்பு படையினால்
12 பேர் எந்த விசாரணையும் இன்றி படுகொலை செய்யப்பட்டிருப்பதும், ராஜஸ்தான் மாநிலத்தில்
நடந்த படுகொலைகளும் தனிநபர் பாதுகாப்பு குறித்த ஒருவிதமான அச்சுருத்தலையும், ஐயப்பாடையும்
ஏற்படுத்தியிருக்கிறது.
மாட்டுக்கறி உண்ணுபவர்கள்
தேசவிரோதிகள், அசைவம் உணவு பழக்கமுடையவர்கள் தேசவிரோதிகள் என்ற பிரச்சாரம் பாரதிய ஜனதா
கட்சியால் உருவாக்கப்பட்டது என்பது தற்போது மனித உயிர்களை படுகொலை செய்யும் அளவிற்கு
மாறியிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் தொடர்ந்து பசு பாதுகாப்பு மீதான அரசியல்
கலந்த அக்கறையும், பிரச்சாரமும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில்
பங்கெடுத்துள்ள மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை ஆய்ந்து பசு பாதுகாப்பு என்ற
கோஷத்திற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் அரசியல், கருத்தியல், சித்தாந்த கூறுகளை
வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மாட்டுக்கறி தடை
என்பது உணவின் மீதான ஒரு புதுவிதமான அரசியல் ஆகும். இந்தியாவிலிருக்கும் 35 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களில் 30 ல் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டுள்ளது. 30 மாநிலங்களில்
8 மாநிலங்களில் மட்டும் சில விதிமுறைகளுடன் தடைவிதிக்கப்பட்டது.
தற்போதைய விதிமுறைகளின்
படி, பசுவதைத் தடை அமலில் இருக்கும் சில இந்திய மாநிலங்களில் 10 ஆண்டுகள் வரை சிறை
தண்டணையும், ரூ.50000 வரை அபாரதமும் விதிக்கப்படலாம் என விதிமுறையிருக்கிறது. பெண்களை
மானபங்கப்படுத்துதல் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறபோது, குற்றாவாளிகளுக்கு
வழங்கப்படும் தண்டனையானது 7 ஆண்டு சிறை தண்டனையும், வரையறுக்கப்படாத அபாரமும் தண்டனையாக
உள்ளது.
தேசிய அளவில் பசுவை வணங்குபவர்களும், பாதுகாப்பாளர்களும்
மாட்டுக்கறி உண்ணுகிற மக்களின் மீது தாக்குதலை துவக்கியுள்ளனர், குறிப்பாக, இசுலாமிய
மக்கள் அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகிறார்கள். உத்திரபிரதேச மாநிலம் தாத்ரி பகுதியில்
ஆட்டுக்கறி வைத்திருந்த முஹமது அக்லாக் மாட்டுக்கறி வைத்திருப்பதாகக்கூறி, 2015 ம்
ஆண்டு பிஜேபி ல் உள்ள பசு இந்து மதவெறிக் கும்பலால்
அவரது சொந்த வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். இது தவிர்த்து,
மாட்டுக்கறி உண்ணுகிற மக்களின் மீதான தாக்குதல், வன்கொடுமை, சமூக பாகுபாடுகள் உள்ளிட்ட மற்ற நிகழ்வுகளும், எண்ணப்படாத பதிவு செய்யப்படாத
நிகழ்வுகளும் உள்ளடங்கும்.
பசு பாதுகாப்பு
குறித்து கவலைப்படுகிற மாடு உரிமை போராளிகள் முன்வைக்கின்ற வாதத்தில் எந்தவிதமான உண்மையும்
அடங்கியிருக்கவில்லை. பசுவை தங்களுடைய தெய்வமாக வணங்குகிறோம். கோமாதா கொலை செய்யப்படுவதை
அனுமதிக்க மாட்டோம். வேதகாலத்திலிருந்து பசு தெய்வமாக வணங்கப்படுகிறது என்றெல்லாம்
வாதிடுகிறார்கள். அது உண்மை தானா என்பதை வரலாற்று தரவுகளிலிருந்து ஆராய வேண்டியுள்ளது.
பொதுவாக மாட்டுக்கறி
உண்பது அல்லது எந்தவொரு இறைச்சியும் உண்ணுகிற விசயமானது புகழ்பெற்ற இந்துயிசத்தின்
அடித்தட்டு சாதியினருடன், குறிப்பாக தலித் மக்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். பின்பு,
இழிவுநிலைக்குரியதாக மாற்றப்பட்டது. உண்மையில், வேதகாலத்தின் போது, பசுமாடுகள் மற்றும்
எருதுகள் சுதந்தரமாக நுகரப்பட்டுள்ளன மற்றும் உயிர்ப்பலியிடப்பட்டுள்ளன.
புதிய
கற்கால பகுதிகளில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளிலிருந்து அந்த காலகட்டங்களில் மாட்டுக்கறி
என்பது முக்கியமான கூறாக இருந்ததை அறிய முடிகிறது. சிந்துச்சமவெளி பகுதிகளில் நடந்த
அகழ்வாய்விலிருந்து மீட்டெடுக்கப்பட்ட எலும்புகளிலிருந்து பல கால்நடைகள் இறைச்சிக்காக
கொல்லப்பட்டுள்ளன. அத்தகைய எலும்புக்கூடுகள் கொல்லப்பட்ட தடயங்களும், எரிக்கப்பட்ட
குறியீடுகளும் காணப்படுகின்றன. M.K தவாலிகர்,
வேதகால ஆரியர்கள் இறைச்சி மற்றும் மாட்டுக்கறி போன்றவற்றை பழங்கள் மற்றும் காய்கறி
உணவின் ஒருபகுதியாக இணைத்துக்கொண்டதாக ஆர்க்கியலாஜி ஆஃப் தி ஆர்யன்ஸ் என்ற நூலில் பதிவு
செய்துள்ளார்
ரிக் வேதகால ஆரியர்கள்
(பிராமணா்கள்) மாட்டுக்கறி உண்ணுவதற்காகவும், உணவு நோக்கத்திற்காகவும் மாடுகளை கொன்றுள்ளனர்.
மாடுகள் மட்டுமல்ல, குதிரைகள், எருதுகள், கழுதைகள், ஆடுகள் போன்றவைகளை பலியிட்டு உண்டுள்ளார்கள்.
பசு பாதுகாப்பு என்பது புத்த மத எழுச்சியின் பின்பு, இந்து மதத்திற்குள்ளாக நிகழ்ந்த
சீர்திருத்தத்தின் மூலமாக வந்ததாகும். அத்தகைய சீர்திருத்தம் தான் சமய நடைமுறை என்ற
பெயரில் விலங்குகள் கொல்லப்படுவதை கண்டித்தது ஆகும்.
இந்தியாவில் மாட்டுக்கறித்
தடையானது, மூன்று விதமான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. முதலாவதாக, இசுலாமியாகள், கிறித்துவர்கள்,
தலித் அல்லது அதிகப்படியான அடித்தட்டு மக்களின்
உணவ பழக்கவழக்கத்தின் மீதான நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் நேரடியான தாக்குதலாகும். உணவின் மீதான தாக்குதலானது சிறுபான்மை மக்கள் மேல்
ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு புதிய வழியாகும்.
இரண்டாவதாக, மாட்டுக்கறித்
தடையானது கடுமையான பொருளாதாரத் தாக்கங்களையும் கொண்டிருக்கிறது. 2014-15 ம் வருடத்தில்
இந்தியா 2.4 பில்லியன் டன்கள் எருலுமைக்கறியை ஏற்றுமதி செய்துள்ளது. உலக அளவில் மாட்டுக்கறி
ஏற்றுமதியில் கிட்டதட்ட 25% பங்களிப்பாகும். இந்தியாவிற்கான 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் வணிகம் தொடர்புடையதாகும்.
மூன்றாவதாக, சுற்றுச்சூழலியல்
பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள கால்நடைகள் வருடந்தோரும் 14.32 மில்ியன்
டன் பசுமை இல்ல வாயுவை உற்பத்தி செய்வதாக கூறுகிறார்கள். அதைவிட இந்தியாவில் விளைகின்ற
காய்கறிகள் அதிகமான.ஆக்ஸிஜனை வெளியிடுவதற்காக காய்கறிகள் உண்ணுவதை பாரதிய ஜனதா தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தடை செய்துவிடுமா?
மேற்கண்ட உண்மைகளையெல்லாம்
மறைத்துவிட்டு, போலித்தனமான முறையில், இந்துக்களின் அடையாள சின்னமாக
பசுமாடு உருமாற்றப்பட்டு, மத அடையாளமானது இந்துத்துவ அரசியல்வாதிகளால் தேசிய அடையாளத்துடன்
இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இது ஒரு தீவிரமான மத மற்றும் மானுடவியல் சார்ந்த பிரச்சினையாக
இந்தியாவில் மாறியுள்ளது.
சமூகத்தில் நிலவுகின்ற
உண்மையை மறைத்து, அரசியல் சுயநலன் கருதி மக்கள்
மத்தியில் உணா்ச்சி பிளம்பை உருவாக்கி, பொய்யான பிரச்சாரத்தின் மூலம் வெற்றி கொள்வதே
அல்லது இலக்கை அடைந்திட முயற்சிப்பதே உண்மைக்கு புறம்பான அரசியல் (Post-Truth
Politics) என்பதாகும். இந்த கருத்தியலின் அடிப்படையில் தான், உலகமய சூழலுக்கு
ஏற்றவாறு பசு பாதுகாப்பு அரசியலை இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
2014 தேர்தலில்,
வெளிநாடு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும்
15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், ஆண்டுக்கு 2 கோடிபேருக்கு வேலை, பணவீக்கத்தை குறைப்பது-
இந்திய ரூபாயின் அதிகரிப்பது, மலிவு விலை பெட்ரோல் என கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே
நிறவேற்றாத தோற்றுப்போன அரசாக மாறியுள்ளது பாரதிய ஜனதா அரசு.
மூன்று ஆண்டுகளில்,
இந்திய மக்கள் சந்தித்து வருகிற யதார்த்தமான பிரச்சினைகளான கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை,
விலைவாசி உணர்வு, குறைவான ஊட்டச்சத்து, சுகாதார பிரச்சினைகள் ஆகியவற்றையெல்லாம் பின்னுக்குத்
தள்ளிவிட்டு பசு பாதுகாப்பு பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்தி சிறுபான்மை மக்ளுக்கு எதிராக
அரசியல் செய்து கொண்டிருக்கிறது பிஜேபி. மக்கள் சந்தித்து வருகிற பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வுகளை முன்வைப்பதற்கு பதிலாக, மக்களை தங்களுக்கு எதிராக சிந்திக்கக்கூட விடாமல்
ஏதாவது அடையாளம் அல்லது நம்பிக்கை அடிப்படையில்
மக்களை உணர்ச்சியூட்டி, பிற்போக்கு வழியில் கொண்டு செல்வதே உண்மைக்கு புறம்பான அரசியலாகும்
(Post-Truth Politics). கடந்த காலத்தில் அயோத்தில்
ராமருக்கு கோயில் கட்டுவோம், படேலுக்கு சிலை
வைப்போம் என்ற பிரச்சாரம் போன்றவையெல்லாம் இந்த பின்னணியில் எழுந்தது தான்.
ஆகவே, பசு பாதுகாப்பு,
மாட்டுக்கறிக்குத் தடை என்பதெல்லாம் 2014 ல் வளர்ச்சி நாயகனாக முன்னிருத்தப்பட்ட குஜராத்
புகழ் மோடி அரசின் தோல்வியை மறைப்பதற்காக போடப்படும் அரசியல் நாடகமாகும். மதம் அல்லது இறையியல் என்பதைத் தாண்டி, பசுவதைத்
தடைக்குப் பின்னால் அதிகப்படியான வகுப்புவாத அரசியல் உள்ள இந்துத்துவா நிகழ்ச்சி நிரலில்
உள்ளது. இதுதான் பசு பாதுகாப்பிற்கு பின் உள்ள உண்மைக்கு பிந்தைய அரசியலாகும்
(Post-Truth Politics). மதம் அல்லது இறையியல் என்பதைத் தாண்டி அதிகப்படியான வகுப்புவாதமே
பசு பாதுகாப்பு அரசியலுக்குப் பின்னால் உள்ள இந்துத்துவா நிகழ்ச்சி நிரலில் நிறைந்து
நிற்கிறது. நாட்டை
பாதுகாக்க விடுதலை போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள், பசுவை பாதுகாக்கும் அக்கறையோடு
பேசுவார்களா?