வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

வகுப்புவாத வன்முறையின் புதியகலை: உற்பத்தி செய்யப்பட்ட கலவரம்



             டெல்லியிலிருக்கின்ற திரிலோக்புரி, பவானா, ஓக்லா மஜ்னு கா தில்லா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மதவெறிக் கலவரமானது உடனடி அரசியல் லாபத்திற்காக வகுப்புவாத வன்முறையை கட்டமைப்பதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. வகுப்புவாதிகளால் உருவாக்கப்படுகிற மதவெறி உணர்வுதான் கலவரத்தை நீண்ட தொலைவிற்கு முன்னெடுத்துச் சென்றுள்ளது. இத்தகைய கலவரங்களைக் கட்டுப்படுத்துவது கடினமான ஒன்றாகியுள்ளது. இப்புதியமுறை கலவரங்களுக்கான சூழலை உருவாக்கி, இரு சமூகங்களை வன்முறையில் ஈடுபடவைத்து, வன்முறைக்கு வகுப்புவாத சாயத்தை வழங்குகிறது சங்பரிவாரம். சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு மையத்தில் பணிபுரிகின்ற முனைவர் கிலால் அஹமதுவின் கருத்துப்படி, இது வன்முறைத் தீயை பற்றவைப்பதற்காக, நன்கு சிந்தித்து வெளிப்படுத்தப்பட்ட ஒரு வெளிப்புறத்திட்டம் என்கிறார். குஜராத் வன்முறைக்குப் பின்பு போலித்தனமான பண்பாட்டு தன்மையோடு மூன்றுவிதமான முக்கிய குணங்கள் வகுப்புவாத வன்முறையில் மேலெழுந்துள்ளன. அந்த மூன்று குணங்களைப் பொருத்தவரையில் ஒன்று அணிதிரட்டுவது 2 வது துவக்கத்தில் கலவரத்தை வரையறுத்த நிலையில் இருக்க வைப்பது, இறுதியாக மதவெறிப் பரப்புரையை புகுத்துவது ஆகியனவாகும். திரிலோக்புரி, பவானா வன்முறைகளை பொறுத்தவரை துவக்கத்தில் வகுப்புவாதச் சாயத்தன்மை இல்லை. தனது அரசியல் சுயலாபத்திற்காக மதவெறி சாயத்தை இந்துத்துவா வகுப்புவாதிகள் பூசினர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் கலவரத் தீ பரவுவதை தடுத்திடுவதற்கு காங்கிரஸ் கட்சியையும், ஆம் ஆத்மியையும் யார் தடுத்தது என்று தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சியை பொருத்தவரை, திரிலோக்புரி கலவரத்தில் எந்தவொரு முதன்மையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போதைய நிகழ்வுகளுக்கு எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நிலையான முன்முடிவு இருப்பதாக சமத்துவ ஆய்வு மையத்தின் இயக்குனரான ஹர்லம் மாந்தர் விளக்கியுள்ளார். ஒரு நிலையான முன்முடிவினை கையில் வைத்துக்கொண்டு சங்பரிவார் அமைப்புகள் தனது அரசியல் இலாபநோக்கங்களை நிறைவேற்றுவதற்காக கலவரத்தை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். அதன் முதல் நடவடிக்கை ஆகத்தான் இரண்டு சமூகத்தினருக்கிடையே முரண்பாட்டிற்கானச் சூழலை உருவாக்குகிறார்கள். தேசப் பிரிவினையின் போது கூட நிலையான வகுப்புவாதக் கலவரத்தின் அலையானது வழிபாட்டுத் தளங்களைச் சுற்றி அசைந்து கொண்டிருந்தது. திரிலோக்புரியின் உள்பகுதியில் இருக்கின்ற மசூதியின் அருகே கொஞ்சதூரம் தள்ளி ஒரு மாதாகி சௌகி நடத்தப்பட்டது. அத்தகைய வழிபாடு நடக்கிறபோது மேற்கண்ட மசூதியை நோக்கி அந்த சுற்றளவில் ஒலிபெருக்கியை வைத்து பிளாக் - 20 ல் மிகுந்த சத்தத்துடன் கூடிய வழிபாடு நடத்தப்பட்டது. இத்தகைய தற்காலகமாக அமைக்கப்பட்ட கோவில்கள் திருவிழாவிற்குப் பின்பும் அகற்றப்பபடாத சூழலில் உணாச்சிகள் அதிகமாகி, சச்சரவுகள் பரவுகிறது. ஆனால் தற்காலகமாக அமைக்கப்பட்ட கோவில்கள் அகற்றப்படாமல் நிரந்தரமாக இருந்துவிடுகிறது. 
சுதந்திரமாக சாராயம் விற்பனை செய்யக்கூடிய காலனியில் குடித்திருந்த இரண்டு குடிகாரா்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு போதுமான அளவில் வகுப்பவாத தீயைப்பற்ற வைத்து வகுப்பவாத சாயம் பூசப்படுகிறது. இந்தப்பிரச்சினையானது சௌகியை ஒரு முஸ்லீம் இளைஞன் அசுத்தப்படுத்தி விட்டதாக பரவியதும், திரண்ட கூட்டம் செங்கற்களைக் கொண்டு வந்து எறிய  ஆரம்பித்தது. அந்த குடியிருப்பின் குறுகிய சந்துக்களிலிருந்து நீண்ட அளவில் செங்கற்கள் விசப்பட்டன. சில கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் அனைத்துமே திட்டமிட்டு உற்பத்தி செய்யப்பட்ட கலவரங்களே என மாந்தர் சுட்டிக்காட்டுகிறார். இந்த சிறிய மதவெறி தீயானது லோக்கல் போலீஸ்காரர்களால் மிக விரைவாக, உறுதியாக அணைத்துவிடக்கூடியது என்றாலும், வன்முறை அதிவேகமாக கூட்டத்தில் பரவியதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிற அனைத்து கலவரங்களிலும் காவல்துறை முடக்கப்பட்டு, தடுப்பாணைகள் வரும்வரை 2 அல்லது 3 நாட்கள் கலவரங்கள் தொடர அனுமதித்துவிட்டு, பின்பு இறுதியாக கட்டுப்படுத்துகிறார்கள். வகுப்புவாத வன்முறைகளை, திட்டமிட்டு வன்முறைகளை திவீரம்குறைந்த, தொடர்ச்சியற்ற வழக்குகளாக கருதக்கூடாது என மனித உரிமை செயல்பாட்டாளர் ஜான் தயாள் அவர்கள் பஸ்ட் போஸ்ட் இதழுக்கு தெரிவித்துள்ளார். இக்கலரவத்தில் மனித உயிர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளன, கொல்லப்பட்டுள்ளனர், சிறைபிடிக்கப்பட்டுள்ளனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை, பாதுகாப்பு, வாழ்வாதாரம், முதலீடுகள் சாம்பலாக்கப்பட்டதையும் நான் பார்த்திருக்கிறேன். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாட்களில் வீடுகளுக்குள் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு தங்கள் உயிரையே இழந்துவிடுகிறார்கள் என்று ஜான் தயாள் கூறுகிறார். மேலும் வகுப்புவாத பதட்டமானது நன்கு வரையறுக்கப்பட்ட திட்டமிட்ட தந்திரம் அல்லது சதியின் ஒரு பகுதியாகத்தான் காலம் முழுவதும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. 1947 ல் இருந்து தலைநகரில் எண்ணற்ற கலவரங்கள் நடந்துள்ளன. 1984 ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மிகப்பெரியதாகும். முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களும் கூட காலம் முழுவதும் நடந்தேறியுள்ளது. பவானா குற்றம் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று ஆகும். இக்கலவரம் சங்பரிவார் மற்றும் காங்கிரசுக்காரர்கள் கூட எவ்வாறு கலவரத்தில் பேரார்வத்தோடு ஈடுபட்டன, தீமைகளுக்கு உதவியாயிருந்தன என்பதை வெளிப்படுத்துகிறது. அத்தகைய குற்றங்களுக்கு காரணமான கலவரக்காரர்கள் மீது எந்தவொரு கைது நடவடிக்கையையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை. இந்த கலவரங்கள் அனைத்தும் வாக்களிக்கும் மக்களை மதரீதியாக உணர்வூட்டுவதற்கு உரிய முயற்சியாகும். இந்த கறைபடிந்த அரசியல் முற்போக்கான மக்கள் வாழக்கூடிய டெல்லியில் வேலை செய்தால் என்னாகும்? சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் அடைவதற்காகவே வாக்காளர்களை திசைதிருப்புகிறார்கள். தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றாலும் மிக மோசமான எண்ணிக்கையை தொடாது. இருந்தாலும் மக்களவைத் தேர்தலை முன்வைத்தே வகுப்புவாத உணர்வூட்டியவர்கள்  இப்போது 2015 சட்டமனற தேர்தலுக்கான விரிவான முன் தயாரிப்பபுதான் இக்கலவரங்கள்.
வலுவான அரசியல் பரிமாணத்தை, திரும்ப திரும்ப நிகழ்கிற முரண்பாடுகளைக் குறிப்பிட்டு திரிலோக்புரியில் நடந்ததைப் போன்ற கலவரங்களை திட்டமிட்டு வாக்களிக்கின்ற மக்களை திசைதிருப்பவதற்காக உருவாக்கிவருகிறார்கள் என மாந்தர் கூறுகிறார். டெல்லி தேர்தலில் ஒரு புதுவகையான திசைதிருப்பப்பட்ட தொகுதியில் சங்பரிவாரம் வெற்றிபெறும். வகுப்பவாத காழ்பபுணர்ச்சியை எவ்வளவு காலத்திற்கு அரசியல் வெற்றிகளின் கருவியாக திட்டமிட்ட கலவரங்களாக பயன்படுத்தப்போகிறார்கள் என்பதைப் பற்றியே கவலை கொள்கிறேன்.  டெல்லி பல்கலைகழகத்தில் அரசியல் விஞ்ஞானம் போதிக்கின்ற பேரா. சரோஜ் கிரி கூறுகையில் மிகத் தெளிவாக , ஒரு நீண்ட அரசியல் சதியின் ஒரு பகுதியாகத்தான் திரிலோக்புரி, பவானா, கலவரங்கள் திட்டமிட்டு சமூகத்தில் மதவெறி உணர்வூட்டப்பட்டுள்ளது என்று கூறுகிறார். எதிர்காலத்திற்கு மிக அருகாமையில் உள்ள டெல்லி தேர்தலுக்கு இதனை சாதகமாக்குவதற்காகவே மதவெறியை உயர்த்திப் பிடித்துள்ளனர் பாஜக வினர். வகுப்புவாத சக்திகள் நாட்டின் வேறுபகுதிகளிலும் இத்தகைய தொடர் நிகழ்வுகளை ஒரு வரையறுக்கப்பட்ட நடவடிக்கையாக, வரிசையாக கலவரங்களையும், மதவெறி உணர்வுகளையும் விதைத்துள்ளதாக தெரிவிக்கிறார். பேராசிரியர்.

பர்ஸ்ட் போஸ்ட் இணைய இதழ்
தமிழில்

கே.எம். பாரதி

கருத்துகள் இல்லை:

2017 UGC வழிகாட்டுதல் -மேலும் ஒரு அபாயம்

21 ம் நூற்றாண்டில் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக உருவாக வேண்டும் மற்றும் கல்வித் த...