வியாழன், 27 அக்டோபர், 2016

மூலதனத்திற்கு எதிரான கலகமாக மாறும் புலம்பெயர்வு


-பேரா.பிரபாத் பட்நாயக்.
ஏகாதிபத்திய  ஆக்கிரமிப்பு மற்றும் போர்களின் சூறையாடல்களுக்கு உள்ளான நாடுகளிருந்துதான்,  குறிப்பாக அதிகப்படியான எண்ணிக்கையில் அகதிகள் ஐரோப்பாவிற்குள் தீவிரமாக  நுழைந்திட முயற்சிக்கிறார்கள். நவீன வரலாற்றில் முதல் முறையாக, இந்த கருத்து எந்த சந்தேகமும் இன்றி      பெருநகர மூலதனம் தனது  முழுக் கட்டுப்பாட்டுக்கு வெளியே எடுத்திட  முயன்று வருகிறது. அதாவது அந்த பிரச்சினையில் மற்றொரு அம்சம் உள்ளது. இதுவரை பெருநகர மூலதனத்தின் தேவைகளால் தான் புலம்பெயர்வு  ஆணையிடப்பட்டன. இப்போது, முதல் முறையாக, மக்கள் பெருநகர மூலதனத்தின் கட்டளைகளை மீறி, அவர்கள் குடியேற விரும்பும்  விஷயத்தில் தங்கள் சொந்த விருப்பங்களுக்கு  வலு கொடுக்க முயன்று வருகின்றனர். மிகவும் ஏழையான  மற்றும் பரிதாபகரமான, தங்கள் நடவடிக்கைகளின் தாக்கங்கள் பற்றி அறியாத, ஆதரவற்ற இந்த அகதிகள் தவிர்க்க முடியாமல்  அடக்கத்துடன்   பெருநகர மூலதனத்தின் கட்டளைக்கு அடிபணிவார்கள்   என்ற கருதுகோளின் மீது பெருநகர மூலதனம் நிகழ்த்திய ஆதிக்கத்திற்கு எதிராக  எங்கு வாழ வேண்டும் என்ற  விஷயத்தில். தங்கள் கால்களின் வழியே   வாக்களிக்கிறார்கள். 

இதுவரை உலகில் யார் எங்கே வாழவேண்டும், என்ன பொருட்களுக்கு கீழ் வாழ்க்கை  தொடரவேண்டும்

என்ற கருத்தை பெருநகர மூலதனம் தீர்மானித்து வந்தது என்பது முதலில் தீவிரமாக  தோன்றவில்லை. 

நவீன காலத்தில் பெருநகர மூலதனத்தால் தூண்டப்பட்ட மூன்று விதமான மிகப்பெரிய புலம்பெயர்வு 

அலைகளை ஒருவரால் வேறுபடுத்தி காணமுடியும்.இவைகளில் முதலாவதாக,  பெருநகர 

மூலதனத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சுரங்கம் மற்றும் விவசாய பண்ணைகளில் 

பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி  செய்திட ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு மில்லியன் 

கணக்கான மக்களை அடிமைகளாக கொண்டு சென்றதாகும்.

அடிமை வணிகம் ஒருகாலத்தில்   கொடிகட்டி பறந்து முடிந்ததும் ,ஒரு புதுவகையான புலம்பெயர்வு இருந்தது.  19 ம் நூற்றாண்டிலும் மற்றும் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்தியா போன்ற வெப்பமண்டல பகுதிமட்டுமல்லாது, சீன போன்ற அரை காலனிய மற்றும் சார்பு நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாம் உலக நாடுகளின் மீது பெருநகர மூலதனமானது தொழில்துறை தகர்ப்பை திணித்தது.அதே நேரத்தில், வணிகத்தில் ஏகபோக லாபத்தை ஈட்டுவதற்காக மூன்றாம் உலகநாடுகளின்  உற்பத்தியை மதிப்பிடுவதற்காக ,ஒரு ஏற்றத்தாழ்வான பரிவர்த்தனையை திணித்து, நேரடியாக ஆட்சி நிர்வாகம் நடத்தக்கூடிய பகுதிகளில் எந்தவிதமான பொருள் இழப்பீடும் இன்றி வரி வருவாயை பயன்படுத்தினார்கள்.மேலும் , பல்வேறு வழிகளில் அந்த சமூகங்களில் உள்ள  பொருளாதார உபரியையும் சுரண்டியது.

ஆனால், விரைவில்,  இரண்டு இடம்பெயர்வு தடங்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெருநகர

மூலதனத்தின் ஆணையின்படி உருவாக்கப்பட்டது. ஓன்று வெப்ப மண்டல நாடுகளுக்கிடையே நடந்தது, 

மற்றொன்று மித வெப்பமண்டல பகுதிகளுக்கிடையே நடந்தது. குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து 

மிதவெப்ப மண்டல் பகுதியான  அமெரிக்க,கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 

வெள்ளையர்கள் குடியறிய பகுதியை நோக்கி நடந்தது. வெப்பமண்டல பகுதியிலிருந்து 

புலம்பெயர்ந்தவர்களை மிதவெப்ப மண்டல பகுதிக்குள் சுதந்திரமாக நுழைந்திட 

அனுமதிக்கப்படவில்லை. உலகில் உள்ள மற்ற வெப்பமண்டல பகுதிகளில், பெருநகர மூலதனம் எங்கே 

விரும்புகிறதோ, அங்கே  உள்ள சுரங்கம் மற்றும் விவசாய பணிகளுக்கு வேலை செய்ய, இந்தியா 

மற்றும் சீனா போன்ற வெப்பமண்டல பகுதியிலிருந்து கூலித்தொழிலாளர்களாக, ஒப்பந்த கூலிகளாக 

மேற்கிந்திய தீவுகள், பிஜி தீவுகள், இலங்கை, லத்தின் அமெரிக்கா, கலிபோர்னியா போன்ற 

பகுதிகளுக்கு   கொண்டு செல்லப்பட்டனர்.(சீன தொழிலாளர்கள் தங்கத்தை பிரித்தெடுக்கும் பணியை செய்தனர்)

மிதவெப்ப மண்டலங்களுக்கிடையே நிகழ்ந்த புலப்பெயர்வானது தொழில்துறை  மூலதனத்தை 

 ஐரோப்பிய  தலைநகர்களிருந்து  புதிய குடியேற்றங்களில் விரிவுபடுத்துகிற நடவடிக்கையின் 

ஒருபகுதியாகும். அது குடியேரியவர்கள்  ஒப்பீட்டளவில் உயர் வருமானம் பகுதிகளில் இருந்து 

வந்தவர்கள் என்ற தன்மையில் அதிக வருமானம் தருகிற  பிராந்தியங்களை  நோக்கி  நகர்ந்தனர்.  

மாறாக, வெப்பமண்டல பகுதிகளுக்குள் தொழில் துறை முதலாளித்துவத்தின் எந்தவிதமான  பரவலும் 

இல்லாததன்  விளைவாக அங்கு குறைவான வருவாயே கிடைத்தது.




இந்த வேறுபாட்டுக்கான கரணம், வெப்பமண்டல புலம்பெயர்வு குறைந்த வருமானம் உள்ள 

ஒன்றாகவும், மித வெப்பமண்டல  புலம்பெயர்வு அதிக வருமானம் கொண்ட ஓன்று என்ற உண்மையில், 

ஒப்பீட்டளவில்  இந்தியா மற்றும் சீனாவிலிருந்து புல,பெயர்ந்த தொழிலாளர்கள் ஐரோப்பிய 

தொழிலாளர்கள் அதிக தொழில் உற்பத்தி திறனுடையவர்களாக அடிக்கடி காரணம் கூறப்படுகிறது. இது 

தவறானது. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்களின் வருவாயானது அபூர்வமாக 

எப்பொழுதாகினும் உள்ளபடியே தொழில் உற்பத்தித்திறன் அளவில் தீர்மானிக்கப்படுகிறது.மாறாக 

தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்தாலும்  கூட, தொழிலாளர் போதுமான  அளவு 

அதிகரித்தால், உண்மையான பிழைப்பு ஊதிய அளவில்  தேக்கம் ஏற்படுகிறது.  


ஐரோப்பியாவிலிருந்து மிதவெப்பமண்டல் பகுதிக்கு குடியறியவர்கள் எளிமையாக உள்நாட்டில் 

வசிக்கின்ற மக்களை அகற்றிவிட்டு ,அவர்களின் நிலங்களை வேளாண்மைக்காக 

எடுத்துக்கொண்டார்கள் என்ற உண்மையே மற்ற இடங்களில் இருந்ததனால் இரண்டு 

இடம்பெயர்தலுக்கிடையான  வருவாய் வித்தியாசத்திற்குரிய உண்மையான காரணமாகும். 

அதுமட்டுமல்ல ஐரோப்பியர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருந்த அதிக பட்ச ஊதியத்தையே தாங்கள் 

புலம்பெயந்த பகுதிகளிலும் பின்பற்றினர் இயல்பாகவே ஐரோப்பியர்கள் யாரும் குறைந்தபட்ச  சொற்ப 

கூலிக்கு வேலை செய்யமாட்டார்கள். ஐரோப்பிய பெண்மணியோ அல்லது ஆண்மகன் ஒருவரோ 

அமெரிக்கர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களின் மூலமாக அதிகபட்ச வருமானத்தை எட்டமுடியும் 

என்ற அடிப்படையில் தான் வெளிநாடுகளில் உள்ள மிதவெப்ப  பிராந்தியத்தை நோக்கி 

புலம்பெயர்ந்தனர்.இந்த வாய்ப்புகள் தான் ஐரோப்பியாவில் இருந்த அதே உண்மையான ஊதியத்தை 

புலம்பெயந்த பகுதிகளிலும் வைத்திருக்குமாறு செய்தது.

மாறாக வெப்பமண்டல பகுதிக்கிடையே நிகழ்ந்த குறைந்த வருமானமுள்ள புலம்பெயர்விற்கு பின்பு 

 சுரண்டல் மற்றும் தொழில்துறை தகர்ப்பின் காரணமாக மிகவும் ஏழ்மைநிலைக்கு தள்ளப்பட்டனர். 

வெப்பமண்டல பகுதிகளில்  பூர்விக குடிகளிடமிருந்து நிலத்தை பறித்து, அவர்களையே விவசாயிகளாக 

அமைத்துக்கொள்கிற எந்த வாய்ப்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை.

பொருளாதார துறையில்  நன்கு அறியப்பட்ட மேற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பொருளாதார 

டபிள்யூ ஆர்தர் லூயிஸ், பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த  இடம்பெயர்வு ஒவ்வொன்றும் 50 

மில்லியன் நபர்களை உள்ளடக்கியதாக  இருந்தது என்று மதிப்பிட்டுள்ளார். அதிகப்படியான 

எண்ணிக்கையில் புலம்பெயர்வு தொடர்பான எண்கள் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டிய 


அவசியம் இல்லை. இந்தியாவை சேர்ந்த உட்ஷா பட்நாயக், அதிகரிக்கும் மக்கள்தொகையில் பாதிப்பேர் 


1815 - 1910 ம் ஆண்டுகளுக்கிடையே இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும்  புலம்பெயர்ந்து , 

தொழில்துறை முதலாளித்துத்துவத்தை ஐரோப்பாவிலிருந்து புதிய குடியேற்றங்களுக்குள் 

 விரிவுபடுத்தியுள்ளனர் என மதிப்பிட்டுள்ளார்..

இடம்பெயர்வின்  மூன்றாவது பெரிய வழித்தடம்  இரண்டாம் உலகப் போருக்குப்  பிந்தைய காலத்தில் 

நடந்தது. . போருக்கு பிந்தைய மறுகட்டமைப்பு ஏற்றம் மற்றும் தேவை நிர்வாகத்தில் அரசு நிர்வாகத்தின் 

தலையீடு ஆகியவற்றின் வருகையால்  பொருளாதாரத்தில், குறிப்பாக ஐரோப்பாவில், அதன்பிறகு 

பெருநகரங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகமான வளர்ச்சி  விகிதத்தை பார்க்கலாம், துவக்க 

ஐம்பதுகளின் ஆண்டுகளிலிருந்து எழுபதுகளின் துவக்க ஆண்டுகள் வரையிலான இந்த காலகட்டத்தை 

சிலர் முதலாளித்துவத்தின் பொற்காலம் என அழைக்கிறார்கள்.உழைப்பின் உற்பத்தி திறன் அதிகமாக 


இருந்த போதிலும் , மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உயர்வாக இல்லை என்பது அதிக 

தொழிலாளர் தேவையை  விளக்குகிறது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை 

அரிதாகவே உயர்ந்திருந்ததன்னால் உழைப்பு தேவையை ஈடுகட்ட  வெப்பமண்டல பகுதிகளிலிருந்து 

தொழிலாளர்களை இறக்குமதி செய்தது.அதுவரை எளிதாக வெப்ப மண்டல பகுதிகளிடமிருந்து 

 தொழிலாளர்கள்  நுழைய முடியாத சூழலில்  மிதவெப்ப மண்டலத்திற்குள் உயர்ந்துவரும் உழைப்பு 

தேவையை சரிக்கட்ட தேவையான அளவில் புலம்பெயர அனுமதிக்கப்பட்டனர். ஜெர்மனியில் 

துருக்கியர்கள், பிரான்சில் அல்ஜீரியா மற்றும்  பழைய பிரெஞ்சு காலனிகள் தெற்காசிய மற்றும் 

மேற்கிந்திய பகுதியை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குறைந்த கூலிக்காக தொழிலாளர்களாக கொண்டு 

செல்லப்பட்டனர். ஏற்கனவே அங்கிருந்த உள்நாட்டு வேலையாட்கள் அப்பணியிலிருந்து 

விடுவிக்கப்பட்டு , புதிய பணிகளில் பதவி உயர்வோடு அதிகாரமும் பெற்றனர்.சுருக்கமாக போருக்கு 

பிந்தைய முதலாளித்துவமானது மாநகரங்களில்  அடிமட்ட அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர் 

அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

வேலையின்மை  மற்றும் அரைகுறை வேலைகளின் தர வரிசையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 

மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் சரிசமற்ற பிரதிநித்துவத்தில் இருந்தனர் என்பதால் போருக்கு 

பிந்தைய வளர்ச்சியானது அல்லது அனைவராலும் அழைக்கப்பட்ட முதலாளித்துவத்தின்     

பொற்காலம் தகர்ந்தது.  இந்த நூற்றாண்டின்  துவக்கத்தில்  உருவான முதலாளித்துவ நெருக்கடியானது 

அவர்களின் நிலைமைகளை இன்னும் மோசமானதாக மாற்றிவிட்டது. இந்த நிகழ்வின் சமூக 

விளைவுகள் மிகவும் விவாதிக்கப்பட்டுள்ளன .

துரத்தியடிக்கப்படும் மக்கள்

முற்றிலும் புறம்பாக, பெருநகர மூலதனம் எல்லா இடங்களிலும்  போர் மற்றும் ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்துவிடுகிறது. உலகின் மற்ற பகுதிகளில் கூட மக்களை வெளியேற்றியதற்கும், அவர்களின் வறுமைக்கும் அதனுடைய வழக்கமான செயல்பாடுகள் இன்றியமையாததாக இருக்கிறது. எங்கே தொழிலாளர் தேவை இருக்கிறதோ, அந்த பிராந்தியத்திற்கு அவ்வப்போது எச்சரிக்கையோடு கட்டுப்பாடான புலம்பெயர்வை அனுமதித்து, அவர்களை தங்களின் சொந்த பிரபஞ்சத்திற்குள்ளாகவே சிக்கவைப்பதுதான் முதலாளித்துவத்தின் கொள்கையாகும். அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது விஷயமில்லாது,  எந்தவிதமான முணுமுணுப்பும்  இல்லாமல் தொடர்ந்து சொந்த பிரபஞ்சத்திற்குள்ளாகவே சிக்கவைப்பதுதான் பெருநகர மூலதனத்தின் முடிவாகும். நிச்சயமாக இந்த கருதுகோளின் அடிப்படையில் தான், பெருநகர மூலதனமானது ஏகாதிபத்திய போர்களையும், ஆக்கிரமிப்புகளை மூன்றாம் உலக மக்கள் மீது கட்டவிழ்த்துவிடுகிறது. பெருநகர மூலதனத்தின் இந்த செயல்வகையே மேற்கண்ட  கருதுகோளை நிறைவேற்றிக்கொள்ள தேவைப்படுகிறது.

எல்லாராலும் அழைக்கப்படுகிற ஐரோப்பிய அகதிகள் நெருக்கடியின் வழியே  மேற்கண்ட கருதுகோளை இனி நிறைவேற்ற முடியும். குறிப்பிடத்தக்க வகையில் பெருநகர முதலாளித்துவத்திடம் அகதிகள் நெருக்கடிக்கான எந்த சரியான பதிலும்  இல்லை. பெருநகர மூலதனமானது  அவர்களை அனுமதிக்காது ; அது தங்கள் நாடுகளில் அவர்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.ஓன்று இது ஒரு மனிதநேய போக்காக இருக்க வேண்டும், ஆனால் முதலாளித்துவத்திடம் மனிதநேயம் இல்லையே. இந்த உண்மையே முதலாளித்துவத்தை வேட்டையாட  வரும்.

09.10.16 -  PEOPLE DEMOCARACY கட்டுரையின் தமிழ் சுருக்கம்

                                                                    கே.எம். பாரதி ,
                                        ஆய்வு மாணவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

                                                                              

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை:உயர் கல்வியில் நவீன தாராளமய கொள்கையின் மரபு

இந்தியா நாடானது உலகத்திலேயே 25 வயதுக்கு குறைவான இளைஞர்களை 54 சதம் கொண்டிருக்கும் நாடு.இளைஞர்கள் மற்றும் வயத்துவந்தவர்கள் கல்வியைப் பொறுத்தவரை இந்தியா முறையே 86.1 சத்தம் மற்றும் 69.3 சததுடன்  உலகத்தில் கல்வியறிவு அதிகம் பெறாதவர்கள் பட்டியலில்இருக்கிறது. கல்வியறிவு பெற்ற இளைஞர்களிடையேயான பாலின இடைவெளியும் ஆண்களில் 90 சதம் , பெண்களில் 81.8 சதம் என்ற அளவில் உள்ளது.
தேசத்தின் உயர்கல்விமுறை மீது போடப்பட்ட மோசமான அடித்தளத்தின் காரணமாக நமது உயர்கல்விமுறையை  வலுப்படுத்தவேண்டும் என்பதில் சந்தே கமேயில்லை. ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை இந்த திசைவழியில் எதையும் சாதிக்கப்போவதில்லை.இந்தியாவின் எதிர்கால கல்விமுறையை தீர்மானிக்கப்போகிற புதிய கல்விக்கொள்கையைப்பற்றி  கடந்த இரண்டு வருடங்ககளாக நாம் கேள்விப்பட்டுவருகிறோம் .ஆனால் மத்திய மனித மேம்பாட்டுத்துறையால்  பின்பற்றபடுகின்ற மற்றும் அதன்  தவறான முறையீடுகள் குறித்த விவாதத்திற்குள்  இன்னும் நாம் போகவேயில்லை. இரண்டு ஆண்டிற்கு பிறகு தேசிய கல்விக்கொள்கை-2016 குறித்த வரைவு ஒன்று எதிர்கால கல்விமுறை குறித்து யுஜிசி ன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வரைவு கொள்கையானது இந்தியா உயர்கல்வியில் சந்தித்து வருகின்ற மிகப்பெரிய சவால்களில் ஒன்றான குறைவான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை சுட்டிக்காட்டியுள்ளது. 2014 - 15 கல்வியாண்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம்  23.4% ஆகும். இந்த வரைவு 2017-18 ல் 25.2% மற்றும் 2020-21 கல்வியாண்டில் 30% என்ற விகிதத்தில்   மாணவர் சேர்க்கையை உயர்த்த இலக்கை தீர்மானித்துள்ளது.
இருந்தபோதும் கூட இதே வரைவு கொள்கை, நிதி நெருக்கடி காரணமாக எந்தவிதமான புதிய கல்வி நிறுவனங்களையி திறக்கப்படமாட்டாது என்பதையும்  சேர்த்தே  முன்மொழிந்துள்ளது . முன்மொழிந்த ஆலோசனைக்கும் , அதை அடைவதற்கான வழிமுறையும் முரண்பாடாக உள்ளது. புதிய கல்வி நிலையங்களை அமைக்க அதிகமான தொகை தேவைப்படுவதால் , அதற்கு பதிலாக , இருக்கின்ற கல்விநிலையங்களை  மட்டுமே விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. புதிய உயர்கல்வி நிலையங்களை திறக்காமல் அத்தகைய விரிவாக்கமும் சாத்தியப்படாது. புதியக்கல்வி நிலையங்களை திறக்காமல் 30% மொத்த மாணவர் சேர்க்கையை அடைவேமேயானால், அது தனியார் கல்வி நிறுவனங்கள் மூலமே சாத்தியம் என அரசாங்கம் இந்த வரைவுக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்திய உயர்கல்வித்துறையில் ஏற்கனவே 62% மான மாணவர் சேர்க்கையை வைத்திருக்கிற தனியார் கல்விநிறுவங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் மேலும் தனியார்மயப்படுத்துவதற்கான நடவடிக்கையாகும். மேற்கண்ட முன்மொழிவை பகுப்பாய்வு செய்து பார்த்தால் உயர்கல்வித்துறையில் சமச்சீரான  தன்மை      குறித்த இந்த அரசாங்கம் கவலைப்படவேயில்லை என்பது தெளிவாகிறது. தற்போது இந்தியாவில், பிராந்திய மற்றும் சமூக அளவிலும், பாலின ரீதியாகவும் உயர்கல்வித்துறையில் ஏற்றத்தாழ்வு என்பது மாணவர் சேர்க்கையில் மேலோங்கியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, 2011-12 ல்  ஜார்க்கண்டில் 8.4% ம், சண்டிகரில் 53% என்ற அளவில் பிராந்திய ரீதியான வேறுபாட்டை பார்க்க முடிகிறது.
இதேபோலத்தான் சமூகரீதியான  ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக காணப்படுகின்றன. நாம் ஒட்டுமொத்தமாக மொத்த மாணவர் சேர்க்கைவிகிதத்தை சமூக, பாலின ரீதியாக கணக்கிலெடுத்துக்கொண்டால் 24.5% மாணவர்களும்  , 22.7% மாணவிகளும் , சமூக ரீதியாக SC 18.57% மற்றும் ST - 13.3% என்ற அளவில் உள்ளது .உயர்கல்வித்துறையின் மிகப்பெரிய சவால்களில் இதுவும் ஒன்றாகும். உயர்கல்வி மீதான இப்புதிய கல்விக்கொள்கையானது  இது போன்ற பிரச்சனைகளை பேச தவறியுள்ளது. வெறுமனே கவலைப்பட்டால் மட்டும் நோக்கத்தை அடைந்திட முடியாது. பிராந்திய மற்றும் சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டுமானால் புதிய உயர்கல்வி நிலையங்களை நாடு முழுவதும்   அதிக்கப்படியான எண்ணிக்கையில் பல்வேறு பகுதிகளில் துவங்கிட வேண்டும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள  கல்விமையங்கள் அனைத்தும் மாநிலத்தின் தலைநகரை சுற்றியும் , முக்கியமான மாநகரங்களில் மட்டுமே செயல்பட்டுவருகின்றன. இத்தகைய கல்வி நிறுவனங்கள் கூட அதிகப்படியாக தனியார்துறையை சார்ந்து இருப்பதால் மாணவ-மாணவிகளிடம் கல்விக்கட்டண கொள்ளையடிக்கப்படுகிறது.  இது வசதிபடைத்த மாணவர்களுக்கு ஓரளவு உதவி செய்யும். இதுபோன்ற நடவடிக்கைகூட மாணவர்களை   தங்கள் சொந்த மாநிலங்களிலிருந்து உயர்கல்விக்காக   புலம்பெயர்வதற்கு வழிவகுக்கிறது.
எந்தவிதமான இடஒதுக்கீட்டு கொள்கையின் தனியார் கல்விநிலையங்களில் இல்லாத போது, சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வித் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் ஏற்றத்தாழ்வான  மாணவர் சேர்க்கைவிகிதத்தில் ஒரு முறிப்பை உருவாக்கவும் புதிய கல்வி நிலையங்கள் அரசு தரப்பில் துவக்கப்படவேண்டியது அத்தியாவசியமாகிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள வரைவுகொள்கையானது , உயர்கல்வித்துறையில் சமச்சீரான போக்கை ஏற்படுத்த எந்தவிதமான  உருப்படியான ஆலோசனையையும் கொண்டிருக்கவில்லை .
முன்னதாக இந்தியாவின் கல்விமுறை குறித்த தேசிய அளவிலான கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டன ஒவ்வொரு கமிட்டியும்,கமிஷனும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக  6% நிதியை ஒதுக்கீட முன்மொழிந்துள்ளன. 1968, 1986.1992 ஆகிய ஆண்டுகளில் அமைக்கப்பட்ட குழுக்களும் கூட இதையே வலியுறுத்தியுள்ளன. அரசாங்கம் ஒருபோதும் அத்தகைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகன்றதே   இல்லை. அரசாங்கமானது  நீண்டகாலமாக  நிலுவையில் இருக்கின்ற GDP யில் 6% நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்ற இலக்கை அடைய சில நடவடிக்கைகளை    அரசு மேற்கொள்ளுமாம். குறைந்தபட்சம் 6% நிதியை முதன்மையாக வைத்திருக்கும் என்று கூறியுள்ளது . இது பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் ,அடுத்தவரியிலேயே அரசாங்கத்தின் உண்மையான எண்ணம் வெளிப்படுகின்றது. அதாவது தனியார் துறை மற்றும் பெருத்த கர்ப்பரேட்டுகளை  மனிதநேய அடிப்படையில் கல்வித்துறையில் முதலீடு செய்ய வலியுறுத்தப்படும் என்று புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் சொல்லியிருக்கிறது அரசு. தனியார்துறை முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில்  அதற்கு ஈடாக ஏராளமான சலுகைகளை அரசு வரிவழங்குமாம்.   தனியார் நிதி மூலதனத்தை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை கல்வித்துறையில் புகுத்துவதற்கான ராஜதந்திரமான வழிமுறைதான் இது. இதன் முழுமையான அர்த்தம் இந்தியாவில் மேலும் வருங்காலத்தில் உயர்கல்வி நிறுவங்கள் தனியார்மயப்படுத்தப்படும் என்பதுதான். புதிய கல்வி கொள்கை குறித்த இந்த வரைவானது நிதி மற்றும் ஆதரங்களை திரட்டுவது என்ற பெயரில் உயர்கல்வித்துறையில் தனியார் மூலதனம் நுழைவதற்கு தடையாய் இருக்கின்ற சட்டரீதியான இடர்பாடுகளை எளிதாக்குக்கின்றது. கல்வியை தனியாருக்கு விற்கவேண்டும் என்ற அரசின் உள்ளத்திலிருக்கின்ற தந்திரத்தை   தெளிவாக வெளிப்படுத்துகின்றது  இக்கொள்கை . இதோடு இணைந்து அந்நிய நேரடி முதலீட்டும் சேர்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தலாக  உயர்க்கல்வியிலும்,ஆராய்ச்சிகளிலும் தொடர்ந்து இருக்கப்போகின்றது.

நம் மேலும் பல்வேறு ஆய்வு உதவித்தொகைகளை, மத்திய பட்ஜெட் மூலம் தேவையான நிதி ஒதுக்கி உயர்கல்விமையங்களில் நடைபெறும் ஆராய்ச்சியை  ஊக்குவிக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அரசாங்கத்தின் மனநிலையானது மேலும் மத்திய பட்ஜெட்லிருந்து  நிதி ஆதாரத்தை குறைத்து , உயர்கல்வித்துறையிலிருந்தே வெளியேறும் வகையில் உள்ளது. ஒருவேளை இந்த முன்மொழிவு நிறைவேறுமெனில், உயர்கல்வித்துறையை கொள்ளையடித்து சூறையாடி கபளீகரம் பண்ண துடிக்கிற தனியார் மூலதனத்திற்குத்தான் உதவிபுரியும்.
உயர்கல்வியில் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை குறித்த பல்வேறு நிர்வாகரீதியான மாற்றங்களையும் முன்மொழிந்துள்ளது இக்கொள்கை. அதாவது, மத்திய மனித மேம்பாட்டுத்துறைக்கு உதவிபுரிய  ஐந்தாண்டுக்கு ஒருமுறை கல்வித்துறை வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு கல்வி மன்றம் அமைக்கப்படுமாம். இந்தியகல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த ஆலோசனைகளை இக்குழு மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு வழங்கிடும். மத்திய அளவில், அதேபோல மாநிலங்களில் ஓய்வுபெற்ற உயர்நிதிமன்ற நீதிபதிகளை கொண்ட தீர்ப்பாயங்களை கல்விப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அதோடு இணைந்த முறையில் உயர்கல்வி மையங்களில் ஆய்வு மேற்கொண்டுவருகின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிற கல்வி உதவித்தொகையை நிர்வகிப்பதற்கான குழுவையும் முன்மொழிந்துள்ளது .இது மாதிரியான முன்மொழிவுகள் படிப்பதற்கு  நன்றாக இருந்தாலும்  கூட , உயர்கல்வித்துறையின் பல்வேறு செயல்பாடுகளுக்கு வெவ்வேறு குழுக்களை உருவாக்குவதன் வழியே பல்கலைக்கழக  மானியகுழுவின்  செயல்பாடுகளை முடக்கி முற்றாக ஒழிப்பதற்குத்தான்  இத்தனை பித்தலாட்டங்களும் . கல்வி நிறுவங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிற யுஜிசி யின் செயல்பாடுகளை மிக அமைதியாக அழித்திட  அரசு திட்டமிட்டுள்ளது. ஏனெனில் யுஜிசி தான் எப்பொழுதும் தனியார் கல்விநிறுவங்களின் அக்கிரமங்களுக்கு தடையாக பார்க்கப்படுகிறது. யுஜிசி யை கலைப்பது என்பது தனியார் கல்விநிறுவன முதலாளிகளின் நீண்டகால   விருப்பத்தை அரசாங்கமே நிறைவேற்றுவதாகும். இந்திய உயர்கல்வித்துறையானது ஒழுங்குமுறை, ஆட்சிமுறை , நிர்வாகம் குறித்த பிரச்சினைகளில் இருக்கிறபோது , தற்போது புதிய கல்விக்கொள்கையின் அலையோசனைகளை ஏற்று , தனித்தனி நிறுவனங்களாக யுஜிசி ன் செயல்பாட்டை பிரிக்கிறபோது மேலும் சிக்கலானதாக பிரச்சினை மாறும்.
கல்வித்துறையில் நவீன தாராளவாத நிகழ்ச்சி   நிரலை தீவிரப்படுத்திடுவதற்காக , இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்க  வலியுறுத்தப்படுகிறது. கடந்த UPA அரசாங்கமானது, கல்வியில் வெளிநாட்டு மூலதனத்தை புகுத்திட, வெளிநாட்டு பல்கலைகளை அனுமதிப்பதற்கான  மசோதாக்களை  பல்வேறு வடிவத்தில் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தது.
ஆனால், பரந்துபட்ட சமுதாய எதிர்ப்பின் காரணமாக ஒன்றுகூட நிறைவேறாமல் போனது. தற்போதைய பிஜேபி அரசாங்கமானது புத்துணர்ச்சியோடு புதிய கல்விக்கொள்கை  பெயரில் வெளிநாட்டு மூலதனத்தை கல்வித்துறையில் திறந்துவிட முயற்சிக்கிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை  கொண்டுவர  தேவையான சட்டதிருத்தங்களை மேற்கொள்வதன் வழியே வெளிநாட்டு பேராசிரியர்கள்கூட இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தியாவில் அந்நியநாடு  பல்கலைகள் இயங்கவேண்டுமென்பதற்காக ஒட்டுமொத்த உயர்கல்வித்துறையே மாற்றியமைக்க அரசு விரும்புகிறது. அத்தகைய தேவைகளில் ஒன்று, இந்தியாவில் ஒரேவிதமான முறையில்  உயர்கல்வி இருக்கவேண்டியுள்ளது, ஏற்கனவே ,CBCS மற்றும் RUSA போன்ற முந்தைய  காங்கிரஸ் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் கூட இந்திய மாணவர்கள் விரும்பியது அல்ல, வெளிநாட்டு முதலாளிகளின் லாபகரமான களமாக கல்வித்துறையை  மாற்றிட உருவாக்கப்பட்டதே ஆகும்.

உயர்கல்வியில் தரத்தை உத்திரவாதப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். தரம் குறைவான கல்விநிறுவனங்கள் மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதைபற்றி  பல்வேறு கமிட்டிகள் அறிக்கைகள்  நமக்கு அறிவுறுத்தியுள்ளன. அதிகப்படியான அரசுதுறை கல்விநிறுவனங்கள், அதைவிட தனியார் கல்வி நிறுவனங்கள் , சரியான கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதி ,ஆசிரியர் காலிப்பணியிடங்கள், தரம் குறைந்த ஆசிரியர்கள், காலம் கடந்த பயிற்றுவிப்பு முறை, தரம் தாழ்ந்த ஆராய்ச்சி வடிவங்கள் போன்ற பல பிரச்சினைகளை  சந்தித்து வருகின்றன. இந்த பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைக்காமல் தரமான கல்வியை உறுதிப்படுத்துவது என்பது சாத்தியமில்லை.    
நமது உயர்கல்வியை தரம் உயர்த்தப்பட , முதலில் அதிகப்படியான எண்ணிக்கையில் நல்ல தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் பெரும்பான்மையோரை ஆசிரியர் பணியானது கவர்ந்துள்ளது. இந்திய இளைஞர்கள் உயர்கல்வியில் ஆர்வமற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாவிட்டாலும் அவர்கள் அனைவரும் ஆசிரியர் பணி மூலமே தங்கள் வாழ்க்கையை துவங்க விரும்புகிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் கொள்கையின் காரணமாக ,காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதபோது , அத்தகைய வாய்ப்பை இளைஞர்கள் ஒருபோதும் பெறப்போவதில்லை என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவுக்கொள்கையானது, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற தற்காலிக, வருகைதரு, கவுரவ பேராசிரியர்கள் குறித்து வாய்திறக்கவேயில்லை. உண்மையாகவே நம் நினைத்ததைப்போலவே உயர்கல்வியில் தரத்தை உயர்த்த விரும்பினால் அரசாங்கம்  கல்விநிலையங்களில் காலியாக  இருக்கின்ற அனைத்து ஆசிரியர் பணியிடங்களையம் நேர்த்தியான விதிமுறைகளை பின்பற்றி, வெளிப்படைத்தன்மையோடு நிரப்பப்பட வேண்டும்.  
நமது உயர்கல்வியை தரம் உயர்த்தப்பட , முதலில் அதிகப்படியான எண்ணிக்கையில் நல்ல தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். தற்காலிகமாக பணியிலிருக்கின்ற ஆசிரியர்களால் தரமான கல்வியை உறுதிப்படுத்துவது என்பதை கற்பனையில்கூட நினைத்து பார்த்திட இயலாத காரியமாகும்.
வரைவுகொள்கையானது இதுபோன்ற பிரச்சினைகளை பேசினாலும் ,உரிய தீர்வை முன்வைப்பதில்  அமைதி காக்கிறது.  தேசிய தர மதிப்பிட்டு குழு போன்ற அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குழுக்கள் மூலமாக கொடுக்கப்படக்கூடிய தரச்சான்றிதழ்க ள் மட்டுமே அது முன்வைக்கின்ற தீர்வு. NAAC  போன்ற அமைப்புகள் தேசிய மற்றும் உலக அளவிலான தரவரிசை பட்டியலில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இந்த அமைப்புகளால்  கல்வி நிலையங்களின்  தரத்தை   பரிசோதிக்க மட்டுமே முடியும். அதிலும் கூட தனியார் கல்விநிறுவனங்களை பரிசோதிக்க வருகிறபோது மிக மோசடித்தனமான வழிமுறைகளை கல்வி முதலாளிகள் பின்பற்றுகின்றனர். தகுதியான ஆசிரியர்கள், அடிப்படைவசதிகள், ஆராய்ச்சி நிலைகள், இன்னும் ஏராளமான வசதிகள் தரம் உயர்த்தப்படவேண்டும் . உண்மையில், இந்த ஆய்வு  அறிக்கையில்   தனியார் கல்விநிலையங்களை, அதன் செயல்பாடுகளை கண்காணிக்கின்ற வகையில் எந்தவிதமான ஆலோசனைகளையோ, வழிகாட்டுதல்களையோ கொடுக்கப்படவில்லை. நமது மாணவர் சமூகமானது, தனியர்கல்விநிறுவனங்களின் சேர்க்கைமுறையை கண்காணிக்கவும், கல்விக்கட்டண முறையை முறைப்படுத்திடவும் மத்திய அரசாங்கம் சட்டம் கொண்டுவர வேண்டும் என நீண்டகாலமாக  வலியுறுத்திவருகிறது. ஆனால் அத்தகைய கோரிக்கையை அமல்படுத்திட  எந்தவிதமான சரத்துக்களும் புதிய கல்வி கொள்கையில் இல்லை.

வரவிருக்கின்ற புதிய கல்விக்கொள்கையானது, உயர்கல்வித்துறையில் இருக்கின்ற சிக்கல்களையும் , பிரச்சினைகளையும் பேசிடும் மற்றும் கல்வித்துறைக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்றெல்லாம் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் . இத்தகைய நம்பிக்கைகளுக்கான உயர்ந்தபட்ச காரணம் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட விளம்பரம் தான். ஆனால் புதிய கல்விக்கொள்கை சம்பந்தமான T .S . சுப்பிரமணியன் கமிட்டி வெளியிட்ட வரைவு அறிக்கையை பகுத்தாய்ந்து  பின்னர், சமூகத்தில் இருக்கின்ற அறிவு ஜீவிகளும் , மாணவர்களும் ஏமாற்றப்பட்டனர் . இந்த கொள்கை மேலும் உயர்கல்வியை தனியார்மயப்படுத்துவதற்கும், உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டிச்சுருக்குவதை  வலுப்பத்துமே தவிர, தரமான, சமமான உயர்கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்தாது. ஆகவே பரந்துபட்ட போராட்ட மேடையை உருவாக்கி, இத்தகைய அபாயகரமான சவாலை எதிர்கொள்வதே சமூகத்திற்கு முன்புள்ள முதன்மை கடமையாகும்,  
  
-          K. M பாரதி , ஆய்வு மாணவர் , மதுரை  காமராஜர்  பல்கலைக்கழகம்.


2017 UGC வழிகாட்டுதல் -மேலும் ஒரு அபாயம்

21 ம் நூற்றாண்டில் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக உருவாக வேண்டும் மற்றும் கல்வித் த...