திங்கள், 11 ஜனவரி, 2016

இனிமேல் வேண்டாம் Bye! Bye!

நேற்றைய தினம் எனது பிரியமான சகா உடன் உரையாடல் நிகழ்ந்த சமயம்., பேச்சு முடியும் தருவாயில் BYE bye என்றார். எதற்காக Bye சொல்றீங்க என கேட்டபோது அவருக்கும் புரியவில்லை.
உறவுகள் நம்மோடு பிணைந்திருப்பதையே விரும்புகிற மனப்பான்மை தமிழர் எதார்த்தம். யதார்த்தத்தை மறந்து இன்று நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறோம் bye bye.. உண்மையான அர்த்தம்தான் என்ன? மாமழையை, நிலவை, சூரியனை பாடிய சிலப்பதிகாரம், மரங்களைக்கூட தங்கையாக பாவித்த நற்றிணை, அகநானூறு, இன்னும் ஏராளம், இயற்கையை, அஃறிணையை பாடிய தமிழ் சமூகத்தின் வழிவந்தவர்கள் நாம். ஆனால் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பாடுகிற நடமாடும் எந்திரமாக குழந்தைகளை மாற்றியிருக்கிறோம். நாம்மையும் சேர்த்துக்கலாம்.  இப்போது நினைவுக்கு வருவது "பசங்க -2 " திரைப்படமே.  வருகிற விருந்தாளிகளை வரவேற்று முடிந்ததும் குழந்தைகளை " ஆஃன், ஆஃப்" செய்கிற வேலைதான் முதலில் நடக்கிறது வீடுகளில்.! அந்த திரைப்படத்தில் வந்த உறவினர் ஆச்சர்யப்பட்டு கேட்கிறபோது, அந்த குழந்தை சொன்னது எல்லாரையும் சிரிப்புக்குள்ளாக்குகிறது.  உறவுகளை கொண்டாடுவதை விட்டுவிட்டு நுனி நாக்கு ஆங்கில மனப்பாடங்களை களைப்புற ஒப்பிக்க சொல்வது இன்றைய வேடிக்கை. மாறட்டும் எல்லாம். நம்ம விசயத்துக்கு வருவோம். இனிமேல் Bye bye வேண்டாம்.  போய்ட்டு வாங்க!  ன்னே சொல்லிப்பழகலாம். உறவுமுறை தொடர. எவ்வளவாய் இருக்கிறது. இப்போது நானும் போய்ட்டு வரேன்! சகாக்களே!

நன்றி

எனது சகாவிற்கு ...

கருத்துகள் இல்லை:

2017 UGC வழிகாட்டுதல் -மேலும் ஒரு அபாயம்

21 ம் நூற்றாண்டில் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக உருவாக வேண்டும் மற்றும் கல்வித் த...