செவ்வாய், 14 மார்ச், 2017

சல்லிக்கட்டு எழுச்சியும், சங்பரிவாரத்தின் திசைதிருப்பலும்

திராவிட கட்சிகளுக்கு பக்கபலமாக இருந்த, இருந்து வரும் சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர், இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகளால்; பெரும் பாதிப்புக்குள்ளாயிருக்கும் போதும், அணி சேராத அல்லது அணி திரட்டப்படாத தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணி மற்றும் நிரந்தரமற்ற வருமானம் என்ற நிலையில் திக்கற்று இருக்கும் போதும், ஒரு மாற்று சித்திரம் அல்லது பொருளாதாரக் கொள்கை திமுக-அதிமுவிடம் இல்லை என்பது எந்த அளவு உண்மையோ, அதே தான் தமிழகப் பண்பாடு மீட்டெடுப்பு குறித்த அக்கறையிலும் சரியான நிலைபாடு இல்லை என்பதை வறையறுக்க முடியும்.
கடந்த காலங்களில் அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நடந்த  மாணவர் போராட்டங்கள் அல்லது இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் மக்கள் போராட்டமாக மாறுகின்ற தருவாயில் அரசாங்கம் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து போராட்ட உணர்வை மழுங்கடிக்கின்ற வேலையைச் செய்திடும் என்பது தமிழக திராவிட அரசுகளின் வழக்கம். ஆனால், சல்லிக்கட்டை பாதுகாப்பதற்காக நடந்த போராட்டமானது கடந்தகால அனுபவத்தை மாற்றியுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. மெரினாவும், தமுக்கமும் போராட்டக்களத்திற்கான அடையாள சின்னங்களாக மக்கள் மனதில் குடியேறியுள்ளது.
சாதி சார்ந்த விளையாட்டாக, வட்டாரம் சார்ந்த வழக்காக சொல்லப்பட்டுவந்த வழக்கத்தை தவிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தால் தமிழகப் பண்பாடாக தலைநிமிர்ந்துள்ளது ஜல்லிக்கட்டு.
முனுமுனுப்புகளாகவே இருந்த சல்லிக்கட்டுக்கான முழக்கம் வெடித்து கிளம்பியதும், தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றியதும், அவனியாபுரத்திலும், அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் பண்பாட்டுத் திருவிழா மீண்டும் நடந்தேறியிருப்பதும் போராட்டத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கின்றன.
சாதிக்கான விளையாட்டாக பேசப்பட்ட ஜல்லிக்கட்டு தனித்தமிழ்நாடு கோரிக்கையாக தமிழ் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும் அளவிற்கு பரிணமித்ததையும், பிரிவினைவாத கோசம் எழுப்புகிறாhகள்! இந்தியாவை துண்டாட துடிக்கிறாhகள்! என்ற பேரில் ஒட்டுமொத்த போராட்டக்காரர்களையும்;  இந்துத்துவ சக்திகள் தேசவிரோதிகளாக சித்தரிக்க முயன்றதையும், போராட்ட சூழலை வௌ;வேறு வடிவங்களில் திசைதிருப்ப முயன்றதையும் இந்த காகட்டத்தில் பார்க்க முடிந்தது. பீட்டா அமைப்பின் பிரதிநிதி ராதாராஜன் இலவசமாக உடலுறவு கொள்ள அழைப்புவிடுத்தால் கூட மெரினாவில் கூட்டம் கூடும் என்பதையும் அறவழிப் போராட்டத்தை சீர்குலைக்க நடந்த முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இந்த பின்னணியில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் பல்வேறு திசைதிருப்பு வேலைகளுக்கு உள்ளான சூழலில் மதத்தின் பேரில் திசைதிருப்பு வேலைகளை இந்துத்துவ சக்திகள் கையாண்ட விதத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சாதி சார்ந்ததா ஜல்லிக்கட்டு?
மருத நிலம் சார்ந்த வேளாண்குடிகள் தான் வேளாண் தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதே திணை வகை தமிழ்மரபு சொல்லும் செய்தியாகும். அதன் வழி நோக்கின் வேளாண் நிலத்தில் நிகழும் ஜல்லிக்கட்டிற்கு சாதி முகம் இல்லை என்பதை வலியுறுத்தலாம். இடைக்காலத்தில் சாதி முகம் பூசப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிபடுத்திட முடியும்.

காளையை பின்னுக்குத் தள்ளிய பசுவின் காவலர்கள்
தமிழகத்தில் 25 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த சமூக, பொருளாதார மாற்றங்கள் கலாச்சார தளத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருப்பதும், திராவிட அரசியல் சித்தாந்தம் வலுவிழந்து போயிருப்பதும், இடதுசாரி அமைப்புகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் பின்னடைவும், இதே காலகட்டத்தில் எழுந்த அடையாள அரசியல் வழிமுறையும் எண்ணற்ற தாக்கங்கங்களை உருவாக்கியிருக்கின்றன. இந்த முனையிலிருந்து தமிழகத்தில் இந்துத்துவா அரசியலை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஆராய்ந்தால், தங்களை மாற்று சக்தியாக இந்துத்துவா சக்திகள் பறைசாற்றிக் கொண்டிருப்பதை காண முடியும். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, மதமாற்ற எதிர்ப்பு நடவடிக்கை, கலவரங்கள், பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி போன்றவை மூலம் மக்களை அணிதிரட்டுகிற முயற்சியை பின்பற்றி வந்த தமிழக இந்துத்துவ சக்திகள், மத்தியில் 2014 ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக மக்கள் திரளுக்குள் நுழைந்திடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பிற்குரிய பட்டியலில் உள்ள பள்ளர் சமூக மக்களில் முன்னேறிய ஒரு பகுதியினரை (தேவேந்தரகுல வேளாளர்) இடதுஒதுக்கீடுக்கு எதிரானவர்களாக மாற்றுவதன் மூலமும், ஜாதி இந்துக்களாக உள்ள பிறமலைக்கள்ளர் சமூகத்திற்குள் நேதாஜியின் பேரில் இணைவதன் வழியே தமிழகத்தில் இந்துத்துவா அரசியலுக்கு பாதை அமைக்க முயற்சிக்கிறது சங்பரிவாரம்..
மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் தீவிரவாதிகள் கலந்துவிட்டனர், தேசவிரோத கோசங்கள் போடப்படுகின்றன. தனி தமிழ்நாடு கோசம், முஸ்லீம்கள் போராட்டத்தில் தொழுகையில் ஈடுபட்டனர், கோவையில் நடந்த போராட்டத்தில் தேசியக்கொடியை ஒரு இஸ்லாமிய இளைஞன் கிழித்துவிட்டான் என்ற வதந்தியும் கிளப்பிவிடப்பட்டது சங்பரிவாரம்.

சல்லிக்கட்டு மதச்சார்பற்ற நடவடிக்கையாகும். (இந்து, கிறித்துவர், இசுலாமியர் பங்கேற்கின்ற நிகழ்வு- ஆதாரங்கள் உள்ளது)
சல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்துத்துவா அரசியல், போராடுகின்ற மக்கள் கூட்டத்தில் நுழைந்து மாட்டுக்கறி அரசியலை நுழைந்திடுவதற்கான முயற்சியை மேற்கோண்டனர்.
சிந்து சமவெளி நாகரீகத்தின் அடையாளமான காளை, உழைப்பின் அடையாளமாக தமிழர்களால் கொண்டாடப்படுவதும், பண்பாட்டு வடிவமாக சல்லிக்கட்டு உருப்பெற்று நிற்பதும் இந்துத்துவாவின்  ஒற்றைக் கலாச்சார கோசத்திற்கு எதிரானதாக இருப்பதே பி.ஜே.பி போராட்டத்தை சீர்குலைப்பதற்கு காரணமாக கொள்ள முடியும்.


கருத்துகள் இல்லை:

2017 UGC வழிகாட்டுதல் -மேலும் ஒரு அபாயம்

21 ம் நூற்றாண்டில் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக உருவாக வேண்டும் மற்றும் கல்வித் த...