2014 ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது வட மாநிலங்களில், குறிப்பாக, உத்திரபிரதேசத்தில்
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதானமாக முன்வைக்கப்பட்ட கோசம்,
லவ் ஜிகாத் என்பதாகும். இந்து பெண்களுக்கு இசுலாமிய இளைஞர்களால் பாதுகாப்பில்லை. ஆகவே,
மகளை காப்பாற்று, மருமகளை காப்பாற்று இந்து சமூகத்தின் முன்பு முன்வைக்கப்பட்ட பிரச்சாரமாகும்.
”நா பெடி, நா பாகு,
நா மாயென் சுரக்ஷித் ஹெய்ன்; மோடி தேரே ராஜ் மி பஸ் காயென் சுரக்ஷித் ஹெய்ன்.” . அதாவது
.மோடி அரசாங்கத்தில் மகளோ, மருமகளோ அல்லது அம்மாக்களோ பாதுகாப்பாக இருக்கிறார்களோ இல்லையோ,
ஆனால் பசுக்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்கிறது.
பெண்களா அல்லது
பசுக்களா? தற்போதைய விதிமுறைகளின் படி, பசுவதைத் தடை அமலில் இருக்கும் சில இந்திய மாநிலங்களில்
10 ஆண்டுகள் வரை சிறை தண்டணையும், ரூ.50000 வரை அபாரதமும் விதிக்கப்படலாம் என் விதிமுறையிருக்கிறது.
பெண்களை மானபங்கப்படுத்துதல் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறபோது, குற்றாவாளிகளுக்கு
வழங்கப்படும் தண்டனையானது 7 ஆண்டு சிறை தண்டனையும், வரையறுக்கப்படாத அபாரமும் தண்டனையாக
உள்ளது.
இந்த சூழலில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வுபெறும் சூழலில் மாட்டை வதை செய்பவருக்கு 10 ஆண்டு தண்டனை என்பதிலிருந்து ஆயுள்தண்டனையாக உயர்த்தப்படவேண்டும் என கூறியுள்ளது நீதிபதியின் இந்துத்துவ கருத்தியலை வெளிப்படுத்தியுள்ள உடன் , அறிவியல்பூர்வமான இந்திய அரசியலமைப்பு கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக