சனி, 26 நவம்பர், 2016

கம்பீரத்தின் சாட்சியாய் நம் தோழன்

பிடல் காஸ்ட்ரோ - ஒரு சுருக்க வரலாறு
----------------------------------------------------------------
பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz,), ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

கியூபா  பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. சர்வதேச அளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

குழந்தைப் பருவமும் கல்வியும்
---------------------------------------------
1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ பிறந்தார். காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோ ஆவார். காஸ்ட்ரோ குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம் ஆகும். ஏன்ஜல் காஸ்ட்ரோ ஒரு பண்ணையார் ஆவார். ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்கு பிழைக்க வந்தார். அவர் கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார். அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின் தாய் லினா, இவர் ஒரு க்யூப பெண்மணி. ஏழை விவசாயின் மகள். இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார். மேலும் காஸ்ட்ரோ பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல் இயற்கையாகவே ஏழை உழைக்கும் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

கல்வி
----------
1930 ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக காஸ்ட்ரோ தமது ஐந்து வயதில், சான்டியாகோ டி-க்யூபா சென்றார். ஏஞ்சலின் குடும்ப நண்பர் வீட்டிற்கு காஸ்ட்ரோவும் அவரது சகோதர சகோதரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர். ஆனால் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல் குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழுக் குடும்பமும் பகிர்ந்துக்கொண்டது. இதனால் காஸ்ட்ரோவின் சகோதரிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி பள்ளிப் படிப்பை தொடங்கினார். சான்டியாகோ டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில் காஸ்ட்ரோ படித்தார்.

பின் காஸ்ட்ரோ டோலோரஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1941 ல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது. 1945 -ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார். ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். நாட்கள் செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார். பின் காஸ்ட்ரோ 1945 ல் ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாகப் பரிமாணம் பெற்றார்.

முதல் அரசியல்
---------------------------
காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார். அப்போது இரண்டு முக்கிய கட்சிகள் மாணவர்கள் மத்தியில் இயங்கி கொண்டிருந் தன.  ஒன்று 1925-இல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். முதல் வருடமே பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

காஸ்ட்ரோவும் புரட்சியும்
------------------------------------------
கல்லூரியில் பயிலும்போதேகம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். போராட்டங்களும் செய்தார். பேச்சுத் திறமையால் பிடல் மக்களைக் கவர்ந்தார். 1952 ல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா, கியூபாவின் ஆட்சியை கைப்பற்றினார். அப்போது 'குற்றம் சாட்டுகிறேன்' என்னும் பத்திரிக்கையை துவங்கிய காஸ்ட்ரோ, பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தவும், புரட்சிக்கு மக்களை அணிதிரட்டவும் செய்து கொண்டிருந்தார்.

காஸ்ட்ரோவின் பிரச்சாரம்
------------------------------------------
காஸ்ட்ரோ முதன்முதலில் பிரச்சாரம் செய்தது ஓரியண்ட் மாகாணத்தில் ஆதன்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரின் ஒன்று விட்ட சகோதரர் எமிலியோவிற்காக. அப்போது காஸ்ட்ரோவின் வயது 14. பைரனில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் சென்று யார் யார் எந்த எந்த கட்சிகளின் சார்பாக நிற்கிறார்கள், எப்படி வாக்களிக்க வேண்டும் என்று விளக்குவது பிடலின் பொறுப்பு. வெற்றி பெற்றால் குதிரை வாங்கி தருவதாக எமிலியோ கூறியிருந்ததால், அதற்காக முனைப்பாகப் பிரச்சாரம் செய்து அரபிய குதிரையையும் பெற்றார்.

கல்லூரியில் இறுதியாண்டு நடக்கும் தேர்தலுக்கு பிடல் முதல் ஆண்டிலிருந்தே கடுமையாக பிரச்சாரம் செய்தார். அத்தேர்தலில் வெற்றியும் கண்டார்.

முதல் தாக்குதல்
---------------------------
ஜுலை 26, 1953 ல் மொன்காடாத் ராணுவமுகாமின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் பிடெலின் வண்டி கோளாறு காரணமாகவும், இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியைத் தழுவியது. காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார். 1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டார். மேலும் பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாக சாடினார். நீதி மன்றத்தில் ஃபிடெல் நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும். பின் மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார். பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

காஸ்ட்ரோவும் சேவும்
-----------------------------------
மெக்சிகோவில் காஸ்ட்ரோ இருக்கும் போதுதான் அவருக்குத் தேச எல்லைகடந்த மனிதநேயப் போராளியான சேகுவேரா அறிமுகம் ஆனார். அவர் கியூப விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். காஸ்ட்ரோவும் சேகுவெராவும் க்ரான்மா எனும் சிறு கப்பல் மூலம் கியூபா வந்தடைந்தனர். அடர்த்தியான மரங்கள் நிறைந்த சியார்ரா மேஸ்தாரவில் தங்கியிருந்தபடியே கியூப விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்ப்படுத்தினார். பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசியலிசக் குடியரசை நிறுவினர்.

காஸ்ட்ரோவும் அமெரிக்காவும்
-------------------------------------------------
காஸ்ட்ரோவின் ஆட்சியின்கீழ் கியூபா வந்ததும் அமெரிக்கா அவரைத் தன்வசம் இழுக்க முயற்சித்தது. ஆனால் அதற்கு காஸ்ட்ரோ மறுத்து, 'கியூப வளங்கள் கியூப மக்களுக்கே சொந்தம்' என்று கூறிவிட்டார். அதனால் அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தாலும் காஸ்ட்ரோ அதனைச் சமாளித்தார். அமெரிக்கா தனது சி.ஐ.ஏ அமைப்பின் மூலம் காஸ்ட்ரோவை 638 முறை கொல்லத் திட்டம் திட்டியும் அதன் முயற்சிகள் பலிக்கவில்லை.

காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபா
------------------------------------------------------
கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும். மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக உள்ள நாடு கியூபாவாகும்.

காஸ்ட்ரோவிற்குப் பின் கியூபா
-------------------------------------------------
உணவு செரிமானமின்மையால் பிடெல் 2008 ஆம் ஆண்டில் பதவிவிலகினார். அவருக்கு பின் அவரின் தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார்.

என்றாலும் பிடல் சர்வேதச அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அது குறித்த அருமையான தனது கருத்துக்களை எப்போதும் தெளிவாக வெளியிட்டு வந்தார்.

வியாழன், 10 நவம்பர், 2016

Terrorist Trump

Those who decided as the president by the US chronic  capitalism, they became the president of US. At last, Obama.  Now Donald Trump. That is name only changed, not their idea. At present, a lot of people come to the street against the polls on there. Sharply criticized, ideologically exploring the character of the imperialism  and also 
main duty before us, widely  collected the mass to stand against the Imperial power of shrewd US.

சனி, 29 அக்டோபர், 2016

சரித்திரத்தில் இல்லாத சரஸ்வதியைத்தேடும் சங் பரிவாரம்



இந்தியாவில் தனக்கான அடையாளத்தையும், தனது அரசியல் தளத்தையும் வலுப்படுத்துகிற வகையிலும், அதே சமயம் வலதுசாரி இந்துத்துவ கோட்பாடுகளுக்கு பெரும்பான்மை உணர்வூட்டும் விதமாக திட்டமிட்ட சர்ச்சைக்குரிய விவாதங்களையும், முரண்பட்ட சூழலையும் 2014 ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திற்கு பிந்தைய இரண்டு ஆண்டுகளில் RSS  ம் அதன் அரசியல் பிரிவான பிஜேபி ம் உருவாக்குவதை தனது  செயல்வழக்கமாகக் கொண்டுள்ளனர் .அதன் ஒருபகுதியாக, தங்களின்  நீண்டகால  நிகழ்ச்சி   நிரலான   சங்பரிவாரம் குறிப்பிடுகிற சரஸ்வதி நதியின் இருப்பை நிரூபிப்பதாகும். அத்தகைய முயற்சியானது மண்ணியல் நிபுணர் வால்டியா தலைமையிலான  குழு கண்டறிந்துவிட்டதாகவும் ,இனிமேலும்  யாராலும் சரஸ்வதி நதி இந்தியாவில் இருந்ததை  மறுக்க முடியாது எனவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி கடந்த அக்டோபர் 16 அன்று  பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.
புராண காலத்தில் இருந்ததாகவும், ரிக் வேத கால இலக்கியங்களிலும், உபநிடதங்களில் எடுத்தாளப்பட்ட சரஸ்வதி நதியைக் கண்டறிவதற்காக மத்திய அரசானது இந்திய மண்ணியல் நிபுணரும், ஜவகர்லால் நேரு அறிவியல் ஆய்வு மையத்தினை சேர்ந்த கே எஸ் வால்டியா தலைமையில் தொல்லியல் துறை வல்லுநர்கள், நீரியல் விஞ்ஞானிகள் உள்ளடக்கிய  7 பேர் கொண்ட நிபுணர் குழுவை   ஹரியானா மாநில பிஜேபி அரசின் நிதிநல்கையோடு சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க 2016 ம் ஆண்டின் முதல் காலாண்டில் நியமித்தது. இக்குழுதான் கடந்த 6 மாதங்களாக வடமேற்கு மாநிலங்களான  ஹரியானா,ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் வடக்கு பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டு ,அதுகுறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை கடந்தவாரம் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
தொடந்து சரஸ்வதி நதி இந்தியாவில் ஓடியது குறித்த ஆய்வினை  இந்திய வரலாற்று அறிஞர்கள் மறுத்து வருகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியது இங்கு அவசியமாகிறது.
ராமாயணம்,மஹாபாரதம் போன்ற இதிகாசங்களை மையப்படுத்தி , வரலாறை இந்துத்துவ கருத்தியலுக்கு ஏற்ற  வரலாறாக திருத்தியமைக்கிற பணி RSS நிகழ்ச்சி  நிரலில் ஒன்றாக இருக்கிற சூழலில், மத்திய அரசு நியமித்த குழு கண்டறிந்தது சரஸ்வதி நதிதான் என்று இதிகாசத்தில்  குறிப்பிட்டதை மெய்ப்பிக்க முயலுவது வரலாற்று முறைமையியலுக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின் நான்காவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள  அறிவியல்பூர்வமான மனப்பான்மையை வளர்த்தெடுக்கவேண்டும் என்ற வழிகாட்டலுக்கு முரண்பாடாக தேசத்தின் மத்திய அமைச்சர் உமா பாரதி சரஸ்வதி நதிதான் என உறுதிபட சொல்வதை ஆராய்ந்து பார்க்க வேண்டியதாகிறது.

இமயமலையில் தோன்றும் “சரஸ்வதியானது”  இந்தியாவில் மூன்றில்  இரண்டு பங்கு தூரத்தை அதாவது 3000 கிலோமீட்டர் நீளத்தையும், பாகிஸ்தானில் மூன்றில் 1 பங்கு தூரத்தையும் அதாவது 1000 கிலோமீட்டர்   என ஏறத்தாழ 4000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மேற்கு கடலில் கட்ச் வளைகுடாவின் வழியே கலக்கிறது. இமயமலையில் தோன்றும் கால்வாய் ஆனது கிழக்கு மேற்காக இரண்டாக   பிரிந்து சென்றதாகவும், மேற்குமுகமாக  சென்றதுதான்  சரஸ்வதி  நதியென  பெயர்சூட்டிருக்கிறார்கள்.

கடந்த 6 மாத காலத்தில், மத்திய அரசு அமைத்த 7 பேர்  குழுவானது இந்தியாவின் வட-மேற்கு மாநிலங்களில் இமயமலை பகுதி, ஹரியானா ,ராஜஸ்தான், குஜராத்தின் வடக்கு பகுதியில் அகழ்வாய்வு நடத்தியதெல்லாம் உண்மைதான். ஆனால் அவர்கள் எந்த ஆதாரத்தை வைத்து கண்டகழ்ந்தது சரஸ்வதி என்ற முடிவுக்கு வந்தார்கள் என்பதே இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்கள்,முற்போக்குவாதிகள் முன்னிறுத்தும் கேள்வியாகும்..

திரிவேணி சங்கமத்தின் அங்கங்களான கங்கை, யமுனை நதிகள் இருக்கிறபோது புராண சரஸ்வதியை மெய்ப்பிப்பதற்க்காக பாஜக  அரசு மேற்கொண்ட  ஆய்வினை வழிநடத்திய பத்மபூஷன் விருதுபெற்ற திரு கே எஸ் வால்டியா அவர்கள் என்ன சொல்கிறார் என்பதை உற்றுநோக்க வேண்டியுள்ளது.
1) ஆய்வு நடந்த  6 மாதகாலத்தில் தற்போதிருக்கிற  காக்கர்(Ghaggar), ஹக்ரா(Hagra) ,சரசுத்தி(Sarsuti) , நாரா (Nara) போன்ற நதிகளுடன் தொடர்புடைய தனித்த தொன்ம கால்வாய்  ஒன்று குறுக்கே வந்தது என  தெரிவித்துள்ளார்.
2) வரலாற்று ரீதியாக 1700 சிறிய மற்றும் பெரிய கிராம,நகரங்கள் தொன்ம கால்வாயின் இருபுறங்களிலும் அமைந்திருந்தன. இந்த நகர, கிராமங்கள் 5500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சில  நகரங்கள் 100 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மிகாமல் இருந்தது. அப்படியிருக்கையில், இந்த நகரங்கள் தண்ணீர் இல்லாமல் ஜீவித்திருப்பது எப்படி சாத்தியமாகும்? இந்த தொன்மைக்கால்வாய்  தான் இந்த நகர கிராமங்களுக்கு நீர் ஆதாரத்தை வழங்கியிருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
4) இந்தக்குழு  6 மாத ஆய்வின்போது வண்டல்மண் குவியல்களை   அதன் வடிவம், இயல்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்கையில் மிகப்பெரிய நதித  ஒன்றுதான் இதனை கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தவும் வகையில் உள்ளது. இவையனைத்தும்  தற்போதிருக்கின்ற  காக்கர்(Ghaggar), கங்கை, யமுனை நதிகளில் ஒன்றை நினைவுபடுத்துவதாக உள்ளது.

5)ஆய்வு நடந்த பல பகுதிகளில், தொன்மைகால்வாய்களில் இருந்து  சேகரிக்கப்பட்ட கனிமங்கள் மற்றும் இமயமலையின் உயரம் நிறைந்த ,குறைந்த பகுதிகளில்,சட்லஜ், யமுனா போன்ற நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கனிமங்களும் ஸோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இரண்டு பகுதி கனிமங்கள் மற்றும் வேதியியல் கூறுகள் ஆகியன , இமயமலையில் உற்பத்தியாகிற சரசுத்தி,ஹக்ரா, காக்கர் மூலம் தான் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நதி  ஓடியிருக்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, இது எந்த நதி என்பதையும் ,இதன் பெயர் என்ன என்பதையும் என்பனவற்றை நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடிப்போம் என மண்ணியல் நிபுணர் வால்டியா தெரிவித்துள்ளார்

இதுவரை மண்ணியல் நிபுணர் என்ற அடிப்படையில் அகழ்வாய்வில் வெளிக்கொணர்ந்த தரவுகளை பட்டியலிட்ட திரு வால்டியா அவர்கள், சரஸ்வதி என்ற வார்த்தை, ஹரியானா மாநில மக்களிடையே அதிகமா புழக்கத்திலிருக்கும், மிகவும் பிரசித்தி பெற்றதான, மற்றும் மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் பலன்களுக்கு பெயரிடப்பட்டுள்ளதாலும், மாநில வருவத்துறை பதிவேடுகளில் குறிப்பிடப்படுவதால்  இந்த நதியின் பெயரானது சரஸ்வதியாகத்தான் இருக்குமென பரிந்துரைக்கிறார். ஒரு பெயர் மீண்டும் மீண்டும் ஒரு பிராந்தியத்தில் உள்ள மக்கள் திரளால் உச்சரிக்கப்பட்டது என்பதற்காகவே  ஒரு நதிக்கு பெயர் சுட்டிட முடியுமா?

தேசிய ஜனநாயக கூட்டணியின்  முதலாம் ஆட்சிக்காலத்தின் போது வட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, குதிரை உருவம் பொரித்த முத்திரைகள் கிடைத்ததாக வெளிக்கொணரப்பட்டு , அம்முத்திரை சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்டதாக சொன்னார்கள்.. ஆனால்,  அதன் உண்மையான பின்புலத்தை கண்டுபிடிக்கவேண்டுமென வெளிநாட்டில்  ஆய்வுகளுக்கு உட்படுத்துகிற போது அம்முத்திரை போலியானது என உறுதி செய்யப்பட்டது. இப்போது தொன்ம நதி ஒன்றை கண்டுபிடித்துவிட்டு சரஸ்வதி என்று சொல்வதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நம்புவது. கி.மு 2000 ல் வேதங்கள் எழுதப்படுவதற்கு முன்பே சிந்து சமவெளி நாகரீகம்  கி.மு 3300 ல் சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது.ஆனால், சரஸ்வதி மிக பரந்த அளவில் இங்கே பாய்ந்து கொண்டிருந்த போது ஹரப்பா நாகரிகத்துடன் ஓரினமான மக்கள் வேதத்தை எழுதி, ஹரப்பா மற்றும்  மொஹெஞ்சதாரோ நகரங்களை உருவாக்கி வாழ்ந்தனர் என்று முன்பு  கோரினார்கள். அதன்படி , இந்த நாகரீகம் சிந்து-சரஸ்வதி நாகரீகம் என பெயர் மாற்றப்படவேண்டுமென 1996 ல்   வரலாற்று ஆய்வாளர்  எஸ்.பி. குப்தா பரிந்துரைத்தார்.

சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முற்பட்ட பண்பாடு எதுவும் இந்தியாவில் இல்லை என்பதை ஏற்கனவே நடந்துள்ள அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்த பின்னரும் கூட, வரலாற்று ஆய்வு முறைமையியலை நிராகரித்துவிட்டு, புராணத்தை அடிப்படையாகக் கொண்ட மகாபாரத்தைதை நாகரீகமாக மறுகட்டமைக்க முயலுவது என்பது தன் வலதுசாரி அரசியல் தத்துவத்திற்கு ஏற்றாற்போல் வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியாகும். சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பா இக்கூற்றுக்கான சான்றுகளாகும். தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம், முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அக்காலத்து வேறெந்த நாகரிகத்திலும் பார்க்க அளவிற் பெரிதாக சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் (5 இலட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக வளர்ந்திருந்தது. மேலேகண்ட தொன்ம நதிதான் சரஸ்வதி என்றும், ஒருகாலத்தில் வட-மேற்கு இந்தியாவின் ஜீவநாடியாக திகழ்ந்த இந்நதி மகாபாரத காலம் முதல் ஹரப்பா காலம் வரையிலான ஒரு விரிந்த தொடர்  நாகரீகத்தில் தழைத்தோங்கியதாக முன்மொழிந்துள்ளார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி.
2002 ல், புகழ்பெற்ற இடதுசாரி வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் அவர்கள்,  சாவர்க்கர் மற்றும் கோல்வால்கர் ஆகியோரின் பார்வையிலான இந்தியா வரலாற்றின்  துவக்கமானது ஆரியர்களால் உருவாக்கப்பட்டது என்கிற இந்துத்துவ    வரலாற்றை கட்டமைக்க  இக்கருத்து  ஆதரவாக இருக்கிறது  என்கிறார்.
இன்னும் அரசுத்தரப்பில் கே எஸ் வால்டியா தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை முழுமையாக பரிசீலிக்காத சூழலில் மத்திய அமைச்சர்  வெளிப்படுத்தும்  செய்தியானது இந்துத்துவ அரசியலை வழிமொழிந்ததாக உள்ளது.  அறிவியல்பூர்வமான வரலாற்று ஆய்வுகளின் வழியில்  மெய்ப்பிக்கப்படும் முடிவுகளை பின்பற்றுவதே இந்திய தேசத்தின் வரலாறாக இருக்கும்.
அறிவியலை மறுத்து புராணத்தில் இருந்த புஸ்ப விமானத்தை ஆகாயவிமானமாக மாற்றியவர்கள், வரலாற்றை மறுத்து இதிகாசத்தை இந்திய வரலாறாக்க முயலுகிறார்கள்...வரலாறை பாதுகாப்போம்

-    
                                 
                                                                 - கே. எம் பாரதி

                                        ஆய்வு மாணவர், மதுரை காமராஜர் பல்கலைகழகம்.

2017 UGC வழிகாட்டுதல் -மேலும் ஒரு அபாயம்

21 ம் நூற்றாண்டில் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக உருவாக வேண்டும் மற்றும் கல்வித் த...