வெள்ளி, 12 மே, 2017
திருத்தப்படும் விதிகளும் விரட்டப்படும் சமூகநீதியும்
https://theekkathir.in/2017/05/08/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1-2/
புதன், 19 ஏப்ரல், 2017
அரசியலும், வரலாற்று ஆய்வும்
இந்த கையேட்டில் உள்ள கட்டுரைகள் சமீபத்தில் அரசு வழங்கக்கூடிய வரலாற்றுப் பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தின் மீது நிகழ்ந்த விவாதத்துடன் தொடர்புடையது ஆகும். இந்த கையேட்டில் உள்ள பல கட்டுரைகள் சமீபத்திய விவாதத்தின் குறிப்பிட்ட அம்சத்தை கவனப்படுத்துகின்றது. இதற்கு பின்னால் கல்வியை வகுப்புவாதமயமாக்கும் முயற்சிகள் இருக்கின்றன என்பதை வாசகர்கள் புரிந்தகொள்வதற்கு ஏதுவாக் இக்கட்டுரைகள் இருந்திடும். ஆனால் சமூகம் மற்றும் அரசியல் தொடர்பில் இந்தியாவில் வரலாற்றுத்துறையின் வளாச்சியானது பல்வேறு வழிகளில் ஒருவரால் குறிப்பாக வரையறுக்க முடியுமானால் இது ஒரு போற்றத்தக்க முயற்சியாக இருக்கும் என எண்ணுகிறேன். இந்த முயற்சியால் உருவான கீழ்க்காணும் கட்டுரைகளுக்கு ஒரு குறிக்கோளுடைய அறிமுகம் உதவிடும் என்று நம்புகிறேன். இந்த அறிமுகமானது உறுதியாக இவ்விவாதத்துடன் சம்மந்தப்பட்டது இல்லை. ஆனால் வரலாற்றை எழுதுவது, போதிப்பது, ஆராய்ச்சி செய்வது, புரிந்துகொள்வது போன்ற வரலாற்றிலுள்ள நடைமுறைப்பிரச்சினைகளை இக்கட்டுரைகள் சமூக ஆர்வலர் மற்றும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திடும் மற்றும் அவற்றை மேம்;படுத்திடும் என்று நம்புகிறேன்
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எந்தவொரு அடையாளத்தையும் கட்டமைப்பதில் வரலாறானது தன்வயப்படுத்தப்படுகிறது. நமது சமூகத்தில் உள்ள அரசியல் இயக்கங்களின் அல்லது சமூக குழுக்களின் அடையாளங்களை சமூக மற்றும் அரசியல் ரீதீயாக மறுகட்டமைப்பதற்கு கடந்தகாலத்தின் தெரிவுசெய்யப்பட்ட தொடர்கள், உருவகங்கள், நிகழ்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. விரிவான அளவில் பார்த்தால், இதுவரை வரலாற்றை எழுவதில், அதை போதிப்பதில், ஆராய்வதில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளன என்பதைவிட அதில் அரசியல் தலையீடுகள் அடிக்கடி இருந்தது என்பதை நாம் கவனிக்க முடிகிறது. ஒரு கூட்டுப்பார்வையின் வழியே அதன் கடந்தகாலத்தையும், அதனைப் புரிந்துகொள்வதும் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்பதால் இந்த செயலமுறைக்கு கூடுதலாக பங்களிப்பு செலுத்தவேண்டியுள்ளது. அடிக்கடி அரசியலில் தெளிவாக என்ன நடக்கிறது? உண்மையான வரலாற்றுக்கு இடமில்லாமல் , வரலாற்றின் ஒருபகுதியாக அரசியலை உருவாக்குகின்ற தற்போதைய நடைமுறையை நியாயப்படுத்திட வரலாறானது பயன்படுத்தப்படுகிறது.
சமீப காலங்களில் ராமஜென்ம பூமி – பாபரி மஸ்ஜித் போன்ற முரண்பட்ட விசயங்களை விவாதிக்கின்ற போது ஒருவரின் மனதிற்கு உடனடியாக என்ன வருகிறது? இங்கே ஒரு பிரிவினர் ராமர் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் பிறந்தார் என்று கோருகிறார்கள்.சிலர் தோண்டி எடுத்த சில ஆதாரங்களை வைத்துக்கொண்டு அணிதிரட்டியதன் விளைவாக 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச்சின்னமானது நொறுக்கி வீழ்த்தப்பட்டது. தொழில்முறை வரலாற்று ஆய்வாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.? நிச்சயமாக சிலர் எப்போதும் இருப்பது போலவே இருந்தார்கள். வாசகர்களின் உள்ளங்கவராத சில வரலாற்று ஆய்வாளர்கள் கூட ராமர் இந்த இடத்தில்தான் பிறந்தார் அல்லது பிறக்கவில்லை என்று விவாதிக்க முற்பட்டனர். மற்றவர்களுக்கு தொழில்ரீதியான வாழ்க்கையானது முக்கியமான விசயமாக இருந்ததே ,தவிர இவ்விவாதம் முக்கியமானதாக இல்லை. ஆனால் இது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த விசயத்தில் அரசியல் கோர்க்கப்பட்டு, சில தொழிற்முறை வரலாற்றாய்வாளர்கள் இந்த அடிப்படையில் தான் விவாதத்திற்குள் நுழைகிறார்கள். ஒருவர் இரண்டு தூண்களை இடித்து தள்ளினார், மற்றவர்கள் மூன்று தூண்களை இடித்து தள்ளினார்கள். இறுதியாக மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அரசியல் மற்றும் வரலாறு குறித்து விவாதிக்கிறபோது நாம் சிந்திப்பதற்கு ஏற்புடையதாக என்ன இருக்கிறது? இந்த வகையான வரலாறு, கலாச்சாரம், தொன்மம், மற்றும் வேறு சிலவற்றை வரைவதில் அரசியலானது கோர்க்கப்பட்டுள்ளது.
இது அரசியலும், வரலாறும் எவ்வாறு நேரடியாக நெருக்கமான தொடர்புடையன என்பதை மட்டும் சுட்டிக்காட்டுகிறது. நம்மைப் போன்ற பெரும்பான்மை மக்களுக்கு வரலாற்றை புரிந்துகொள்கிற முனைகிற வழியில் வரலாறு மற்றும் அரசியலுக்குமிடையேயான தொடர்பானது நன்கு எதிரொலிக்கிறது. வரலாறு என்று சொல்கிற கணம், நாம் எதைப்பற்றி யோசிக்கிறோம்? சரி, நாம் கடந்த காலத்தைப்பற்றி யோசிக்கிறோம் என்றால் , எது கடந்தகாலம்.? மக்களுக்கு வாசிப்பதற்கு வாய்ப்புள்ள பாடப்புத்தகங்கள் கடந்தகாலத்தை நினைவுபடுத்துகின்றன. ஆனால் வரலாற்றைப்பற்றி சொன்னால் இன்னும் நம் மனதில் ஏதோ ஒன்றுதான் பதுங்கியிருக்கின்றது. வரலாற்றைப்பற்றி நாம் பேசினால் கண்ணுக்குப் புலப்படுவது நாட்டின் விடுதலைப்போராட்டம் என்று தான் நினைக்கிறேன். உலகத்தின் பல்வேறு இடங்களில் பல விசயங்கள் நடந்துள்ளன. நம் உள்ளுர் மக்கள், குடும்பங்கள், நகரங்கள், மாநகரங்கள் ஆகியவை பற்றி கடந்தகாலத்தில் எழுதப்பட்ட கதைகள் அனைத்தும் நம்முடைய தாத்தா – பாட்டிகள் வழியே மரபு ரீதியாக பெறப்பட்டு இருக்கின்றன. இவைகள் காலத்தில் இணைந்து அடிக்கடி நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் ஏன் நாம் கடந்தகாலத்தில் உள்ள குறிப்பிட்ட விசயத்தை மட்டும் யோசிக்க வேண்டும்? இந்த விசயத்தில் ஏன் விடுதலைப்போராட்டம் வருகிறது? இதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்பதை மறுத்துக்கூற முடியுமா? அரசியல் என்றால் எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சம்பந்தப்பட்டது என்றோ அல்லது சில உள்ளுர் தாதாக்களுக்கு உயர்ந்த இடங்களில் இருக்கின்ற செல்வாக்குகளால் பெறுகின்ற விசயங்களாகவோ அல்லது அரசியல் கட்சிகளுடன் சம்பந்தப்பட்டது என்றோ நாம் நினைப்போமேயானால், அதுவல்ல. அதைவிட அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, இந்திய விடுதலைப் போராட்டத்தை இந்தியாவின் வரலாறாக நாம் கருதுவதற்கு வரலாற்று செயல்வகையின் ஒரு முழுத்தொகுப்பும் பங்காற்றியிருக்கிறது. இது ஒரு இளம் தேசத்தின் அரசு தன்னை சட்டபூர்வமாக்கிக் கொள்வதற்கு அதன் மக்கள் முன்பு வைக்கப்படுகிற முதன்மையான அரசியல் திட்டமாகும். அரசியல் இந்த வழிகளில்; நுழைவதை நம்மால் எளிதில் உணரமுடியாது.
இருந்தபோதிலும், அத்தகைய அரசியல் திட்டங்கள் சமூகத்தில்; செல்வாக்கு பெற்று முழுமையாக சிந்தித்து தானாகவே உணரவைக்கிறது. தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாம் அனைவரும் இந்த செயல்முறையில் சிக்கிக்கொள்கிறோம். நமது உலகலாவிய கண்ணோட்டம்,நமது சிந்தனைகள், சமூகத்தின் மீதான நமது அணுகுமுறை ஆகிய அனைத்திலும் அரசியல் கலந்துள்ளது. அரசியலானது பல்வேறு மட்டங்களில் மனித உறவுளுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அபபடியிருக்கையில், பின்பு ஏன் வரலாற்று ஆய்வாளர்களோ அல்லது பருப்பொருள் அறிவியல்களின் ஏதாவது ஒன்றில் தொழில்ரீதியாக ஆராய்ச்சியாளராக உள்ள ஒருவரோ சமூக-வரலாற்று செயலவகைகளிலிருந்து விலகியிருக்கிறார்கள்.
தற்போது வரலாறை எழுதுவதானது எப்படி அரசியலின் ஒருபகுதியாக உணரப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இருந்தாலும் இதனை நாம் பாடப்புத்தகங்களில் வாசிக்கின்ற இந்திய வரலாறை எழுத ஆரம்பித்த நபர்களைத் தேடுவதிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். இந்திய வரலாறை எழுதுவதில் மூன்றுவிதமான நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கீழைத்தேயவாதிகள் -ஓரியண்டலிஸ்ட்கள்
முதலில் இந்திய வரலாறை எழுதியவர்கள் கிழக்கத்தியவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த தேசமான ஐரோப்பிய மண்ணிலிருந்து விலகியே இருந்தார்கள். கீழைத்தேயவாதிகள் கற்பனையல்லாத சமூகத்தை மற்ற இடங்களிலும் தேடினார்கள். அவர்கள் பார்வையில் இந்திய ஒரு கற்பனையான நாடாக தோன்றியது. அவர்கள் தேடிய வகையிலான இந்தியாவின் கடந்தகாலம் முழுவதும் ஆன்மீகம், உள்;ர் குடியரசுகள், நல்லிணக்கம் ஆகியனவாகும். தொழில்மயமாக்கலின் ஆரம்பகட்டங்களின் வழியாக வேகமாக மாற்றங்களைப் பெற்றுவந்த ஐரோப்பிய சமூகத்தில் இதுபோன்ற கற்பனாவாத கருத்தாக்கங்கள் எதுவும் காணப்படவில்லை.
பயன்நெறிக்கோட்பாட்டாளர்கள்
மற்றொரு வகையினர் பயன்நெறிக்கோட்பாட்டாளர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஒரு சமூகத்தின் அதிகப்படியான விருப்பங்கள்தான் அந்த சமூகத்தையும், அதன் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என இவர்கள் நம்புகிறார்கள். இவர்கள் இந்தியாவை ஒரு பிற்போக்குத்தன்மையுள்ள நாடாக கருதினார்கள். இந்த அவல நிலையிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டுமென்றால் ,கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட பிரிட்டி~; ஆட்சியை உள்வாங்கியாக வேண்டும் என்றனர். ஜேம்ஸ் மில், இதே சிந்தனையுள்ள பள்ளியைச் சேர்ந்தவர். இவர்தான் முதன்முதலாக இந்திய வரலாறை புத்தகமாக எழுதினார். அதன் பெயர் பிரிட்டி~; இந்திய வரலாறு என்பதாகும். இங்கிலாந்திலிருந்து கொண்டே இந்திய வரலாறை எழுதிய ஜேம்ஸ் மில் ஒருமுறை கூட இந்தியா வந்ததே இல்லை. ஜேம்ஸ் மில் இந்திய வரலாறை இந்துக்கள் காலம், முஸ்லீம்கள் காலம், பிரிட்டி~; காலம் என இந்திய வரலாறை 3 காலகட்டமாக பிரித்துள்ளார். ஆனால், பிரிட்டி~; காலத்தை கிறிஸ்துவர் காலம் என குறிப்பிடவில்லை. இந்தியாவில் இதுதான் முதல் தலைமுறை வரலாறு.
தேசியவாதிகள்
இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் தேசியவாதிகள் என்ன செய்தார்கள்?
பிரிட்டி~;காரர்களால் இந்தியர்களுக்கு ஏற்ப்பட்ட அவமானங்களைத் தடுத்து நிறுத்துவதே அன்றைக்கு இருந்த தேசியவாத வரலாற்றாசிரியர்களின் உடனடிக் கவலையாகும். அதற்காக பிரிட்டி~; வழிமுறையிலேயே சென்றனர். இதில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன.
1) மதம் தான் வரலாற்று மாற்றத்திற்கான காரணமாக பொருள் கொள்ளப்பட்டது.
2) தேசத்தை கட்டமைக்கின்ற ஒன்றாக மதம் பார்க்கப்பட்டது.
இரண்டு தேசக்கோட்பாட்டின் ஒற்றுமைகள் இங்கே தெளிவாக உறைக்கப்பட்டுள்ளது.
இது ஏன் நடந்தது?
அடிப்படையில் 18 ம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வகுப்புவாதம் மற்றும் தேசியவாதம் போன்ற நிகழ்வுகள், இந்த காலகட்டத்தில் இந்திய சமூகம் கடந்திருந்த பொருளாதாரம், அரசியல், நிர்வாக ரீதியான ஒற்றுமை போன்ற நவீன செயல்முறைகளின் விளைவுகளாக கருதப்படுகிறது. இந்திய சமூகத்தின் முக்கியமான சிறப்பியல்புகளில் ஒரு பகுதியான பரந்துபட்ட ;மற்றும் பல்வேறு வகைப்பட்ட வேறுபாடுகளை உற்றுநோக்குகையில், இந்திய சமூகமானது பலபடித்தான மற்றும் ஒருங்கிணைக்கப்படாத சமூகமாகவும், அதேசமயம் இந்து சமூகமானது ஒருபடித்தானதாகவும், முழுமையாக ஒன்றுபட்டதாகவும் இருந்தது என்ற பிரிட்டி~; அரசின் இந்து-முஸ்லீம் அணுகுமுறைக்கு தேசியவாதிகள் பதில் சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது. இந்து மதத்தையும், இந்திய தேசத்தையும் ஒப்பிடுவதில் இருக்கின்ற அதிகப்படியான சிக்கல்களை இன்று நாம் பார்த்து வருகிறோம்.
ஆனால் எப்படி இந்த வகையான வரலாற்று ஆய்வாளர்கள் இதுபோன்ற தற்பாதுகாப்புடன் முதலிடத்திற்கு வந்தார்கள்?
ஏகாதிபத்திய ஆட்சியானது பல்வேறு வழிகளில் எதிர்கொள்ளப்பட வேண்டியுள்ளது அத்தகைய செயல்துறைகளின் முக்கிய கூறாக தேசிய இயக்கம் இருந்துவருகிறது. உலகம் முழுவதும் கூட கலாச்சார தேசியமானது சித்தாந்தரீதியான முக்கியத்துவம் வாய்ந்த எதிர்ப்பாக திகழ்ந்துவருகிறது. ஏகாதிபத்தியத்திற்கு தீர்வாக கலாச்சார தேசியவாதம் இருந்தாலும், காலனிய ஆட்சியினை கருத்தியல் ரீதியாக விமர்சிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் வலுவாக அதில் பொதிந்துகிடக்கிறது. ஆர்.சி. தத் மற்றும் நௌரோஜி போன்றவர்களால் பொருளாதார விமர்சனத்துடன் முறைப்படுத்தப்பட்ட நன்கு தெரிந்த ஆய்வுகளைத் தவிர்த்து, மற்றவர்கள் இந்தியாவின் கடந்த காலத்தை முறைப்படுத்துவதில் பிரிட்டி~; வழியிலான சித்தரிப்பை மேற்க்கொண்டனர். உங்கள் கடந்தகாலத்தை பாதுகாப்பதனால் மட்டுமே , நீங்கள் ஒரு சுதந்திரமான தேசியத்திற்காக வாதாட முடியும் என்று நிறுவக்கூடிய முறையில் தேசிய இயக்கத்திற்குள் நேரடியாக ஊட்டினார்கள். அடிப்படையில் உலகம் முழுவதும் கலாச்சார தேசியவாதத்தின் தத்துவார்த்த கூறு என்பது கடந்தகாலத்தைப் புனிதப்படுத்துவதே ஆகும்.
தேசிய இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக வளர்ச்சியடைந்தவுடன், நீண்ட அளவில் மக்களை அணி ;திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.தேசிய இயக்கத்திற்குள் மக்களை ஈர்ப்பதற்கு சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் தலைவர்கள் செல்ல வேண்டியிருந்தது. சிலர் இதற்காக ஒரு வழியை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தேர்வு செய்த வழியானது மிகவும் வசதியானது. அது என்ன? ஆதியிலிருந்து அணிதிரட்டுவதற்குரிய வழிமுறையாக இருந்த மதமே ஆகும். திலகர்(விநாயகர் சதுர்த்தி), அரவிந்தர்(ஆன்மீகம் மற்றும் வேதத்தை எடுத்துரைப்பது., காந்தி(ராமர் வழிபாடு மற்றும் பஜனை) ஆகியன உறைக்கத்தக்க எடுத்துக்காட்டுக்களாகும். இந்த வழிமுறையில் இசுலாமியர்களோ அல்லது தாழ்ந்தப்பட்ட சாதியினரோ கூடியமட்டும் ஆர்வமுள்ளவராக இருக்கமுடியாது. அங்கு தேசிய இயக்கத்தின் பாத்திரத்திற்கு அர்த்தம் என்னவாக இருந்திருக்கும்?
இவர்கள் சிலர் மட்டு;ம் தான். நவீன தேசியவாதிகள் என்ன செய்தார்கள்? இந்த வகையான தலைவர்கள் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவத்தின் தாராவாத கருத்துக்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் சமூகத்தில் அறிவியல்பூர்வமான மனநிலை பரவிடவேண்டியதன் அவசியத்திற்காக வாதிட்டார்கள். நவீன தேசியவாதிகள் தேசிய இயக்கத்திற்குள் மதம் போன்ற வழிமுறைகளை பயன்படுத்துவதை கேள்விகேட்காமல் இல்லை. அவர்கள் அனைவரும் , அதில் குறிப்பாக நேரு போன்றவர்கள் தேசிய இயக்கத்தின் உயர்ந்த சொல்வன்மைகளால் வகுப்புவாதம் எதிர்கொள்ளப்படவேண்டுமென்று வகுப்புவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.அடிப்படையில் வகுப்புவாதமானது தேசிய இயக்கத்திற்கு எதிரானது. மதமானது வெகுஜன அணிதிரட்டலுக்கான ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்பட்டது என்பதை ஒப்பிடுகையில் தேசிய இயக்கத்திற்குள் நவீன தேசியவாதிகளின் விவாதங்கள் அரிதாகத்தான் நுழைந்தது.
தேசியவாதமானது ஒட்டுமொத்த மக்கள் திரளுக்குள் நுழைந்திருக்குமேயானால், வகுப்புவாதமானது எழுவதற்கான சாத்தியமே இருந்திருக்காது என்ற ஒரு பொதுவான விளக்கமானது கொடுக்கப்படுகிறது. இதற்கு தேசிய இயக்கத் தலைவர்களின் குறைபாடுகள் குறிப்பிடப்படுகிறது. தேசியம் முழுதும் பரந்துபட்ட நிறுவனமாக இருந்திருக்குமானால,; தேசத்தின் சிந்தனையே முதலும்,கடைசியுமான சான்றாக மக்கள் இருந்திருப்பார்கள். வகுப்புவாதம் மற்றும் தேசியவாதம் இரண்டும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று எதிரானது என்ற உள்ளாந்த ஊகமானது, வகுப்பவாத விசயத்தில் தேசிய இயக்கத்தின் அமைப்பு ரீதியான திறமையின்மையை குறைத்துவிடுகிறது. வகுப்புவாதத்தை எதிர்கொள்வதில் சமூகத்தில் நடந்த சமீபத்தியகால கொந்தளிப்புகளில் தேசிய இயக்க கருத்தின் வரம்புகள் நன்கு உணரப்பட்டுள்ளது.
எனினும், மதம் போன்ற உத்திகள் தலைவர்களால் பின்பற்றப்படுகிறபோது, வரலாற்று ஆய்வாளர்கள் உள்பட தொண்டர்களாலும் பின்பற்றப்படுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டியது முக்கியமான விசயமாகும்.
கட்டுக்கதைகளைக் கண்டுபிடித்தல்
இந்தியர்கள் ஜனநாயகத்தின் வாசத்தை ஒருபோதும் அறியாதவர்கள், மறுபுறம் பிரிட்டி~;காரர்கள் இதை அனுபவித்தவர்கள் என்பது தங்களுடைய ஆட்சியை சட்டபூர்வமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட முறையீடுகளில் இதுவும் ஒன்று. ஓர் சுதந்திரமான சமூகத்தில் தங்களைத் தாங்களே ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று சொல்லப்பட்டது. இது உண்மையற்றது என்பதை சிக்கலான வழிமுறைகளுக்குள் போகாமலேயே நிரூபித்திட முடியும். பிரிட்டி~;காரர்கள் தங்களுடைய சூழ்ச்சிமிக்க அரசியலுக்காக அல்லது நியாயம் கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சி என்பது உறுதியாக நமக்கு தெரியும். இது ஒரு வரலாற்றுப்பூர்வமற்ற முறையீடாகும். ஆனால் இதற்கு இந்திய வரலாற்றாய்வாளர்கள் எவ்வாறு பதிலளித்திருப்பார்கள் என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்? அவர்களும் ஒரு சரிசமமான வரலாற்ற கதையுடனே பதிலளித்தார்கள். அதே தெளிவான அரசியல் சூழ்ச்சியோடு.
கண்டுபிடிக்கப்பட்ட தொன்மங்களில் முதன்மையான ஒன்று பொற்காலம் என்ற கட்டுக்கதையாகும். அப்போது நாம் அனைத்து விசயங்ளிலும் நோய்வாய்பட்டுதான் இருந்தோம். நமது நினைவுதிறனுக்கு எட்டாத தூரத்திலுள்ள ஆதிகாலத்தை தொன்மங்களுக்கான சாத்தியமான காலமாக தேர்வு செய்யப்பட்டதன் முக்கியத்துவம் என்ன என்பதை குறிப்பிட வேண்டியதிருக்கிறது. ஒன்றுமே அறியப்படாத காலத்தில் உணரப்பட்ட தொன்மங்களானது நம்பக்கூடிய ஒன்றாக வெளிப்படும் வகையில் எளிதாக உருவாக்கப்படுகிறது. நம்முடைய தினசரி வாழக்கையில் கூட இதுமாதிரியான நன்கு அறியப்பட்ட அரசியல் உத்திகள் இருக்கின்றன. பல தொன்மங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்திய சமூகத்திற்கு முற்றிலும் தொடர்பேயில்லாத பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் இருக்கின்ற வர்க்க அடிப்படையிலான மேற்குலக சமூகத்தைவிட இந்தியாவில் தார்மீக அடித்தளமான சாதிமுறை மேம்பட்டது என்று வலியுறுத்துவதற்கு, இந்திய நாகரீகம் என்பது ஆன்மீகமானது என்ற தொன்மத்திற்கு சமூக அடிப்படையில் முரண்பட்டதான பொருள்முதல்வாத மேற்குலக சமமானங்கள் இன்னும் பயனபடுத்தப்படுகின்றன. எனினும், இந்திய ஆன்மீகத்தின் முழுமையான கருத்து என்ன? என்று நாம் கேட்கலாம். இன்னும் இங்கே பிரிட்டி~; வழிமுறையில் உருவாக்கப்பட்ட இந்திய ஆன்மீகமானது சௌகாரியமாக ஏற்;கப்பட்டுள்ளது.நாகரீகத்தின் சுய-வரையறுக்கப்பட்ட பண்புகளின் மையபாக அம்சமாக கூறப்படுவது தர்மம், அர்த்தா, காமம், மோட்சம் போன்றவையாகும். அவைகளில் மோட்சம் மட்டுமே ஆன்மீகம் பற்றியதாகும். மற்றவைகள் அனைத்தும் மிகுதியான பொருளியல் நடைமுறை பற்றியும், இன்னும் கூடுதலாக இன்பத்தைப் பற்றியும் இருக்கிறது. இந்த வகையான தொன்மங்கள் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான பண்பு என்னவெனில் இவையனைத்தும் மேற்குலகிலிருந்து பெறப்பட்டதாகும். பொற்காலம் என்பது ஐரோப்பிய வரலாற்றிலுள்ள இருண்டகாலத்தைச் சேர்ந்ததாகும். ஆர்ய தொன்மமானது ஆங்கிலோ-சாக்ஸன் சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட மேற்குலக இனவெறிப் பிரகடனங்களுக்கு விடையாக சொல்லப்பட்டது. ஆர்ய தொன்மமானது கட்டுக்கதை உருவாக்குதலில்; பழமையான எடுத்துக்காட்டாகும். இந்த கருத்தானது ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீககுடிகளாவர் என்பதை எப்போதும் எடுத்துரைக்கி;றது. ஒருவரின் நினைவிற்கு வருகின்ற மற்றொரு கட்டுக்கதை இந்தியா வன்முறையற்;ற நாகரீகமாக இருந்தது என்ற தொன்மமாகும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஒரு செய்தி எதிரொலிக்கிறது. புத்த சமயத்தவரும், சமணர்களும் கொல்லாமையை ஆதரித்து பேசியதும், அவர்களின் சிந்தனைமுறைகள் கொள்கைகளாக இருந்து வருவது நமக்கு நன்றாக தெரிந்ததுதான். எப்போது இந்துயிசம் வன்முறையற்றதாக இருந்தது. அதிகமான வன்முறையுள்ள போர்களின் போதுதான் பகவத் கீதை உருவானது என்பதை குறிப்பிட முடியும்.
சமீபகாலங்களில் விசித்திரமான ஒரு தொன்மத்தை நாம் காதுகளில் கேட்கிறோம். முகலாயர்கள் (முஸ்லீம்கள் என படிக்க அல்லது முஹமது கஜினி கூட சிறந்த கொடுங்கோலனின் பிம்பமாக) கோவில்களை இடிப்பவர்கள், ஆனால், 11; ம் நூற்றாண்டில் கா~;மீரில் இருந்த இந்து மன்னர் ஹர்~ர் கோவில்களை கொள்ளையடிப்பதற்காகவே தொழில் ரீதியான குழு ஒன்றை அர்ப்பணித்தார் என்பது நமக்குத் தெரியுமா?
ஆனால் இதுபோன்ற தொன்மங்களை கொண்டுவருவது இவர்கள் போன்ற தேசியவாத வரலாற்றாசிரியர்களுக்கு எப்படி சாத்தியமானது? ஏன் அவர்கள் இதைச் செய்தார்கள்?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுக்கதை உருவாக்கம் என்பது உலகம் முழுவதும் வளர்ந்து வருகின்ற தேசிய இயக்கங்களின் ஒரு பகுதியாகும். கலாச்சார தேசியவாதமானது எப்போதும் முன்னோக்கிச் செல்லாமல் தலைகீழாக பின்னோக்கிதான் செல்கிறது. அரசியல் எதிரியால் உண்டான சமூக அவமானங்களுக்கு கடந்த காலத்தை நோக்கிச் செல்வதுதான் ஆறுதல் தருகிற ஒரு இயற்கையான சிகிச்சை முறை என்கிறது கலாச்சார தேசியவாதம். காலனிய விசயத்தில் யார் உண்மையான எதிரியாக இருக்க முடியும் ? ஆனால் இவர்கள் அரசியல் எதிரியை கட்டமைக்கி;ற விசயத்தில் கூட ஒரே நாட்டிலுள்ள சமூக குழுக்களையே எதிரியாக்குகிறார்கள். கலாச்சார தேசியவாதமானது நிலைத்து நிற்பதற்கும், அதை பொதுமக்களிடையே வார்த்தைகள் மூலம் எடுத்துச் செல்வதற்கும், எதிரியென ஒருவரை ஆதரிக்ககூடிய முடிவுறா எண்ணிக்கையிலான தொன்மங்களும், ஒரு புனிதபடுத்தப்பட்ட கடந்தகாலமும் எப்போதும் தேவைப்படுகிறது. தங்கள் தாய்நாட்டை பாதுகாக்க வேண்டுமென்ற இலக்குடைய அறிவுஜீவிகளை ஈர்க்கக்கூடியதாக கலாச்சார தேசியவாதம் இருப்பதால், கடந்தகாலத்தை கண்டுபிடித்து அவர்களின் சொந்த வழியில் சென்று மறுகட்டமைப்பது என்பது அவர்களுடைய பொறுப்பாகும். ஆம் அவர்கள் அனைவரும் அரசியல்படுத்தப்பட்ட மனிதர்கள்.;
மற்றொரு காரணம், இந்த வகையான வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் பிரிட்ட~; அரசின் பணியாளர்களாக இருந்தார்கள். ஆட்சியாளர்களுடனோ அல்லது ஆளப்பட்டவர்களுடனோ இருந்தார்கள். கூடவே தேசியவாதிகளாகவும் இருக்க விரும்பினார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள? தேசிய உணர்வையும், தனிப்பட்ட பாதுகாப்பையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?
ஒரு குறுகிய பிராந்திய அளவில் நீங்கள் உங்களது கடந்தகாலத்தை புனிதப்படுத்த வேண்டும். ஆனால் எப்படி செய்வது? கடந்த காலத்தில் ஒரு சிக்கலான காரணத்திற்காக முகலாயர்களை எதிர்த்து சண்டையிட்ட சில பிராந்தியங்களில் சிற்றரசர்களாக இருந்த சிலரின் கதைகளை நீங்கள் புனிதப்படுத்திட வேண்டும். ஆம், ராஜபுத்திரர்கள் ,சீக்கியர்கள் , மராத்தியர்கள் கதைகள் மறுகட்டமைக்கப்படுகிறது. இவர்கள் அனைவருமே; முகலாயர்களுக்கு எதிராக சண்டையிட்டனர் என்ற ஒற்றைக் காரணத்தில் தான் ஒன்றுபடுகிறார்கள். எத்தகைய வீரதீர கதைகள் உங்களுக்கு தேவைப்படுகின்றது? உடனடியாக தேசப்பற்று உணர்வு உந்தும் வகையில் ரானா பிரதாப், சத்ரபதி சிவாஜி போன்றவர்களின் கதைகள் மகிமைப்படுத்தப்பட்டு உங்களுக்கு கொடக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் தேசிய அளவுகோலில் ரானா பிரதாப், சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த சிங் ஆகியோர் மட்டும் ஏன் வீரர்களாக வணங்கப்பட்டனர் என்று என்றாவது நாம் கேட்டிருப்போமா? அப்புறம், அவர்கள் அனைவராலும் கூறப்படும் இருண்ட காலத்தில் தான் , அதாவது முகாலாய பேரரசின் காலம்தான் மாபெரும் இந்திய நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலம் என்கிறார்கள். ஆனால்; தேசயவாத வரலாற்றாய்வாளர்கள் சொல்கிற பொற்காலத்தில் இருந்த புகழ்பெற்ற நாகரீகத்தில் ஏன் அசோகரும், ஹர்~ரும் இடம்பெறவில்லை. இதுபோன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோயோனால் நாமும் சிறிதளவேனும் தேசப்பற்றால் உந்தப்படுவோம். மயிர் இழையளவில் மெல்லியதாக இருக்கின்ற பாஸிசத்தையும், முதிர்ச்சியடையாத அல்லது அனுபவமற்ற தேசப்பற்றையும் பிரிப்பது என்ன என்பதை நம்மால் உணரமுடியும்.
இது கடந்தகாலத்தை விமர்சனமல்லாமல் புனரமைக்கிற போக்கு என்பது தெளிவாக தெரிகிறது. ராஜராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி , திலகர் போன்றவர்கள் நவீன இந்தியாவை தோற்றுவித்தவர்கள் என்று முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். உண்மையாகவே அவர்கள் அனைவரும் மாபெரும் மனிதர்கள் தான். நிலையற்ற கொள்கையுடைய மனிதர்கள் அல்ல.
பல்வேறு குழுக்கள் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள் மற்றும் எதிர் கோரிக்கைகளுடன்; பல தொன்மங்களை ஒருவரால் கொண்டுவர முடியும். ஆனால் இவையனைத்தும் புறவாசல் வழிவந்த தேசியவாதம் என்பதை புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயமாகும். இத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வற்ற தேசியவாதத்தால் செயலூக்கமுள்ள வகுப்புவாதிகளை மட்டுமே விளைவிக்க முடியும். ஆகையால், செயல்பாடுள்ள வகுப்புவாதிகளால் செயல்பாடுள்ள தேசியவாதியாக இருக்கமுடியாது என்பதை மறவாதிருப்பது முக்கியமான விசயமாகும். ஏகாதிபத்தியமானது சாத்தியமுள்ள பல்வேறு அவதாரங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல ஒரு முழுமையான மக்கள் திரளுடன் சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் திறம்பட எதிர்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. தவறான முரண்பாடுகளை அடித்தளமாகக் கொண்டுள்ள அனுபவமற்ற சித்தாந்தங்களால் ஊட்டி வள்ர்க்கப்பட்ட இதுமாதிரியான அரசியலே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை தவறாக வழிநடத்துகிறது.
ஆனால், இவையனைத்தும் முறையற்ற வரலாற்றை எழுதும் உதாரணங்களாக இருப்பதால், முறையான வரலாறை ஒருவர் எவ்வாறு எழுதுவார்?
ஒரு முன் தெரிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை மட்டுமே தொடர்ந்து விவரிக்ககூடிய ஒன்றாக வரலாறு எப்போதும் சித்தரி;க்கப்படுகிறது. நாட்டிலிருக்கின்ற வரலாற்று நடைமுறையின் ஆதிக்க மனோபாவம் என்பது அரசியல் வரலாற்றுடன் இன்னும் தொல்லையாக தொடர்கிறது. வகுப்புவாதம் போன்ற செயல்பாடுகளை ஊட்டி வளர்த்த தொன்மங்களை உருவாக்குவதற்கு உதவிய மன்னர்களின் கதைகளை வரையறுக்கக்கூடியதாக அரசியல் வரலாறு இருந்துவருகிறது. மாறாக, ஆளப்படுவோருக்கும், ஆள்பவருக்கும் இடையேயான உறவுமுறைப் பண்புகளை சரியானமுறையில் அரசியல் வரலாறால் ஆய்வு செய்திட முடியும். இதுபோன்ற திறனுள்ள இயங்கியல் தளவாடங்களின் ஆய்வுகள் மரபான அரசியல் வரலாறுகள் வழக்கமாக மறைத்துவிடுகின்ற செய்திகளை அதிகமாக வெளிப்படுத்துகின்றன.
அதற்குப்பதிலாக கடந்தகாலத்திலுள்ள மக்களின் பண்புகளைப் புரிந்துகொள்வதற்கு, வர்க்க உறவுமுறைகளின் இயல்புகளை வெளிக்கொண்டு வரும் விரிவான பொருளாதார ஆய்வுகள் நமக்கு இன்னும் தேவைப்படுகின்றன. மற்றொரு வகையான சமூக வரலாறு ஆய்வகள் நமது தேசத்தின் சொந்த சூழலில் நம்மிடம் பேசுகிறது. ஒரு உயர்வர்க்க முஸ்லீம் உடன் ஒப்பிடுகிறபோது கீழ்த்தட்டு முஸ்லீமும், அடித்தட்டு ஜாதியிலுள்ள இந்துவும் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கின்றனர். ஒருபுறம், இதுபோன்ற காரணிகள் அனைவராலும் ஒருபடித்தான சமூகமென அழைக்கப்படுகிற இந்து சமூகத்திற்குள்ளும் கூட காணப்படுகின்றன. பிரபலமற்ற வடகலை-.தென்கலை பிராமணர்களுக்கிடையேயான முரண்பாடு, சைவத்திற்கும்.-வைணவத்திற்கும் இடையேயான முரண்பாடு, தேசார்த்தா மற்றும் கொங்கனாஸ்தா பிராமணர்களுக்கிடையேயான முரண்பாடு போன்ற சமூகத்திற்குள் நிலவுகின்ற முரண்பாடுகள் மற்றும் வேறுபாடுகளைப் பற்றி; இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள வேண்டிள்ளது. மேலாதிக்கமுள்ள இந்துக்கள் மற்றவர்களின் நம்பிக்கைகளை ஒடுக்கிய கதைகள் அனைத்தையும் , வரலாற்றின் மற்றொரு வகையில் சென்று, மிக நன்றாக எழுதுவது மற்றும் போதிப்பதன் மூலம் தான் ஒருவர் வெளிப்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக , பிராமணர்களுக்கும், கர்வாகஸ்களுக்கும இடையேயான முரண்பாட்டில், கர்வாகஸ்களால் ; பின்பற்றப்பட்ட லோகாயுத தத்துவமானது , எந்த தத்துவ இலக்கியங்களிலும் இல்லாதபடி பின்பு முழுமையாக அழித்தொழிக்கப்பட்டன.
ஒரு வரலாற்று ஆய்வாளர் தனது ஆய்விற்கு பெரும்பகுதி சார்ந்திருக்கின்ற சான்றுகளை தேர்வு செய்து தான் பயன்படுத்துகிறார். வரலாறை எழுதுவதற்கு சான்றுகள் முக்கியமானது ஆகும். அத்தாட்சியானது ஒரு வரலாற்றாய்வாளனின் ஊகத்திற்கு உருக்கொடுக்கிறது. இலக்கியம், தொல்லியல், வாய்மொழி வழக்காறுகள் உள்ளிட்ட பல்வேறுவகையான சான்றுகள் இருக்கின்றன. பயன்படுத்தக்கூடிய சான்றுகள் எந்தவகையான சாத்தியமான மூல ஆதாரங்களாக இருந்தாலும்., கூறப்பட்டுள்ள சான்றுகளின் சமூகவியல் கூறுகளின் பின்னணியை தெரிந்து கொள்ளவேண்டும். சான்றுகள் அதன் மூலதன்மையிலேயே வரையறுக்கப்பட, சாத்தியமான ஒரு பக்கச்சாய்வை புரிந்துகொள்ள சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, தாங்கள் கருவுறுவதற்கான(நிலைபெறுவதற்கான) அரசியல் பண்புகளை வரையறுக்க விரும்புகின்ற, மேலாதிக்கமுள்ள குழுக்கள்; எடுத்துரைக்கிற வர்ணாசிரம தர்ம கொள்கைகளைக் கொண்டுள்ள வேதம் போன்ற கடந்தகாலம் பற்றிய ஆய்வுகளில் இலக்கிய சான்றுகள் அநேகமாக உயர்ந்ததாக இருக்கிறது.
நாம் சான்றுகளை விமர்சனரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற ஒடுக்குமுறைப் பண்புள்ள சமூகங்களைப் பற்றி உணர்ந்து கொள்ளமுடியும். விமர்சனரீதியான ஆய்வுகளில் சமகால அரசியல் செல்வாக்கு செலுத்துவதால் வரலாற்று ஆய்வாளர்கள் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள்.
இவ்வாறு முரண்பாடாக, கடந்தகாலத்துடன் தொழில்ரீதியாக தொடர்புடைய வரலாற்றாயவாளர் பொதுவாக சமூகத்தின் எதிர்காலத்தினைச் சார்ந்துள்ளார்.
வரலாற்று ஆய்வாளர் வெளிப்படுத்துகின்ற கடந்தகால கருத்துருவானது சமூகத்திற்கு துல்லியமான பங்களிப்பை எதிர்காலத்திற்கு வழங்குகிறது. இந்த கருத்துருக்களின் உள்ளாந்த ஆற்றலில் உள்ள ஒன்று, அரசியல் தொன்மங்களை உருவாக்கி; சமூகத்தில் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது.
வரலாற்றை போதிப்பது மற்றும் கற்றுக்கொள்வதில் ஆசிரியர் – மாணவர் தலைமுறைகளானது தொடர்ச்சியாக ஒரே மாதிரியான பதிவு மற்றும் மறுபதிவில் ஈடுபட்டுள்ளனர். சமூகதளத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கற்றல் நடவடிக்கையின் திறனாய்வு பற்றிய நுட்பத்திறமையானது நமக்கு எடுத்துரைக்கப்படவேண்டும். வகுப்புவாதம் போன்ற வரலாறுகள் பொதுவாக தரம் குறைவான வரலாறுகளாகும். தவறான வரலாறுகளும்,அரசியல் தொன்மங்களும் ஏக காலத்தில் இணைந்தே செல்வது நமக்கு தெரியும். இந்தமுறை தற்போதுள்ள கற்றல் நடவடிக்கைகளின் முன்பிருந்த நிலையில் நன்றாக வளருமேயானால், தவறான வரலாறுகளின் பிரச்சாரம் செய்து அடுத்த தலைமுறைகளின் மேல வசதியாக் எடுத்துச்செல்கிறது.
பாடப்புத்தகங்களை எழுதுவது என்பது முக்கியமானதாகும். வரலாறை எழுவதில் புதுமையான வழிமுறைகள் கற்றல் செயல்முறையுடன் இணைக்கப்படவேண்டும். அதன் ஒருபகுதியாக உள்;ர் வரலாறுகள் எழுதப்பட வேண்டியது முக்கியமான படியாகும். முறைப்படி அமைந்த கடந்தகால சமூக அனுபவங்களாக எழுதப்பட்ட குறிப்பிட்ட வரலாறுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்ற வரலாறின் மரபான பிம்பத்தை உடைக்க இது தீவிரமாக பயன்படுகிறது.
போர்க்குணமுள்ள நாட்டின் வரலாறுக்கு ஒத்ததாக இருக்கின்ற வரலாற்றின் பிம்பமானது, வரலாற்று செயல்முறையின் முக்கிய நோக்கமாக தேசத்தின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பல்வேறுவகைப்பட்ட மக்களின் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு ஆரம்பத்திலிருந்தே மாற்றப்பட வேண்டியுள்ளது. கற்றல் செயல்முறையில் நிறுவப்பட்ட தேசம் அல்லது உலகத்துடன் சாத்தியமான தொடர்புடைய கடந்தகால மொழி பற்றிய வரலாற்றாய்வில் மக்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட அனுபவங்களிலிருந்து ஏராளமாக எழுதிட வேண்டும். வரலாற்றை எழுதுவதில் மற்றும் போதிப்பதில் சம்மந்தப்பட்ட பல்வேறு நபர்களிடம் உறுதியான சித்தாந்தங்கள் பொதிந்துகிடக்கின்றன. அவர்கள் அனைவரும் ஜனநாயக அறிவு உற்பத்தி செயல்முறையில் பங்கேற்றிட கற்றல் செயல்முறையில் கலந்து பேசி முடிவு எடுத்திட வேண்டியிருக்கிறது.
மறுபுறம், கல்விப்புலம் சார்ந்த வரலாறு நடைமுறையில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் செய்த ஆராய்ச்சி அனைத்திலும் என்ன நடந்தது? துரதிஸ்டவசமாக, நாட்டிலுள்ள பள்ளிகள் மற்றும் பெரும்பான்மையாக உள்ள பல்கலைகழகங்களில் போதிக்கப்பட்ட வரலாறானது வரலாற்றில் கல்வி ஆராய்ச்சியில் எதுவும் செய்திடவில்லை. புள்ளிக்கல்வி அதிகாரிகளாலோ அல்லது பல்கலைகழகங்களிலோ இது போன்ற தொடர்புகளை எப்படி நிறுவனமயமாக்குவது என்பது குறித்து அரிதாகத்தான் யோசிக்கப்பட்டது. வரலாற்றின் கல்வி நடைமுறையில் சரியாக பிறகு என்ன நடந்திருக்கும்?
இந்த அணுகுமுறை ஒரு சாத்தியமுள்ள இறுதியில் ஆராய்ச்சி நிறுவனத்திற்குள்ளாக வரலாற்று கல்விப்புல நடைமுறையில் ஒரு சமூகவியலோடு தொடங்குவதாக இருக்கலாம். என்னவகையான ஆய்வுகள் நடக்கிறது மற்றும் அதன் மூலம் கடன் வழங்கும் ஒப்புதலுக்கு தேவையான நிறுவனரீதியான சட்டபூர்வ தன்மையை எப்படி அவர்கள் பெற்றார்கள்?
அரசியல் வெளியில், அதிகமாக கல்வி வெளியில் அதிகார விளையாட்டுக்கள் இயக்கப்படுவதன் முக்கியத்துவம் என்னவென்று புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. நாம் அனைவரும் சில வழிகளில் அல்லது இதரவழிகளில் அதை சந்தேகப்படவேண்டும். உதாரணமாக, ஆய்வுத் தலைப்புகள் தேர்வு செய்வதில் ஆராய்ச்சி நிறுவனங்களிலுள்ள உள்;ர் அரசியல் தான் எப்போதும் தீர்மானிக்கிறது. அதிகாரமிக்க குழுக்களில் உள்ள பொறுப்புக்களை தனக்கான ஆட்களை நியமிப்பது, கல்வி மற்றும் ஆய்வு உதவித்தொகைகளை வெட்டுவது என அனைத்திலும் அரசியல் ஈடுபடுகிறது என்பதற்கு நமது நாட்டிலுள்ள தினசரி அரசியல் வாழ்க்கையே அத்தாட்சியாக இருக்கிறது.
சிம்லாவில் இருக்கின்ற தேசிய மேம்படுத்தப்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தை (Nஐயுளு) சுற்றிய சமீபத்திய சர்ச்சை என்பது ஒரு விசயமாகும். மீண்டும் ஒருமுறை பிஜேபி அதிகாரத்திற்கு வந்ததும், ஜி.சி பாண்டே இந்த மேம்பட்ட நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஒரு தலைமுறையிலுள்ள அனைத்து மாணவர்களையும், ஆய்வாளர்களையும் ஊக்கப்படுத்துகிற ஆராய்ச்சி மரபைக்கொண்ட நிறுவனமாகும். வலதுவாரிகளின் வலது கையான பாண்டே உள்ளே வந்ததும், நடந்த அனைத்து ஆய்வுகளும் முழுதும் போலியானது என்று கூறினார். ஆராய்ச்சி முன்னுரிமைகள் முற்றிலும் திரத்திக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்திலுள்ள ஆய்வாளாகளின் தினசரி வாழ்க்கை எப்படியிருக்கம் என்று ஒருவரால் கற்பனை செய்து பார்க்க முடியும்.
மேலும் இது ஒரு அரசு நிதி நல்கைபெறும் நிறுவனம் என்பது பளிச்சிடுகி;ன்ற உதாரணமாகும். இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபிறகு பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களைப் போல இதுவும் மாற்றியமைக்கப்பட்டதாகும். தொன்ம சர~;வதி நதியின் தடத்தை கண்டுபிடிக்க 10 கோடி ரூபாய் வெளிப்படையாகவே ஒதுக்கியிருக்கிறது. கல்விப்புல ஆராய்ச்சியில் எப்படி அரசியல் நுழைந்துள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது..
இந்த உரையானது நிச்சயமாக வரலாற்றில் அரசியலுக்கு இடமில்லை என்று வாதாடவில்லை. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பல்வேறு வகையான அரசியல் சித்தாந்தங்களுள்ள சிக்கலான வலையின்; கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைகளில் நிச்சயமாக அரசியல் ஆழமாகப் பதிந்துள்ளது. ஒருவர் என்ன செய்வார்? இது ஒரு தீயவட்டம் போல தோன்றும். எனக்கு இருக்கும் விருப்பமானது விவேகமான மற்றும் விமர்சனப்பூர்வமான அரசியல் நடைமுறையில் கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்து கொண்டுவரவேண்டும் என்பதேயாகும். ஒரே மாதிரியாகச் சென்று கேள்விகேட்காமல், வௌ;வேறு அம்சங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தினுடைய பல்வேறு மண்டலங்களின் உள்ள வாழ்க்கையை வடிவமைக்கிற அரசியலானது விமர்சனரீதியான அரசியல் செயல்முறைக்கு தேவைப்படுகிறது..
நமது அரசியல் மற்றும் சமூக வாழ்வின் சமீபத்திய வளர்ச்சிகளின் வெளிச்சத்தில், சமூக ஆர்வலர்களாக, நாம் அனைவரும் என்ன மாதிரியான இலக்கு நமக்கு மேல் இருக்கிறது என்பது குறித்து ஆழ்ந்து யோசிக்க வேண்டும். விமர்சனரீதியான ஆய்வுகள் துவக்க முயற்சிகள் நிச்சயமாக அடிமட்ட அளவிலிருந்து செயல்படுத்திட வேண்டும். ஒரு எதிர்விளைவுள்ள பொறுப்பு உணர்வுடன் தலையிடுவது உடனடி தேவையாயிருக்கிறது. இன்று, நாம், முன்னுரிமையுடன் பிற்காட்சி; பயன்பாடுகளை, கடந்தகால தலைமையின் விளைவுகளை உட்காhந்து விவாதிக்க முடிகிறது. ஆனால் தெரிந்தும், நாமும் ஒரே மாதிரியான இலக்கிய படைப்பை தொடர்;ந்து விடுத்தால், இது நமக்கோ அல்லது எதிர்கால தலைமுறைக்கோ நியாயமாக இருக்கும். நம்மிடையே இந்தவகையான எதிர்வளைவுள்ள வரலாற்று உணர்ச்சி தேவைப்படுகிறது. ஏதோ ஓரிடத்திலிருந்து நாம் தான் ஒரு அடித்தளத்தை கட்டமைக்க வேண்டும்.
- செந்தில் பாபு
தமிழில்
கே.எம். பாரதி
ஆய்வு மாணவர், மதுரை காமராஜர் பல்கலைகழகம்.
செவ்வாய், 14 மார்ச், 2017
சல்லிக்கட்டு எழுச்சியும், சங்பரிவாரத்தின் திசைதிருப்பலும்
திராவிட கட்சிகளுக்கு பக்கபலமாக இருந்த, இருந்து வரும் சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர், இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகளால்; பெரும் பாதிப்புக்குள்ளாயிருக்கும் போதும், அணி சேராத அல்லது அணி திரட்டப்படாத தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணி மற்றும் நிரந்தரமற்ற வருமானம் என்ற நிலையில் திக்கற்று இருக்கும் போதும், ஒரு மாற்று சித்திரம் அல்லது பொருளாதாரக் கொள்கை திமுக-அதிமுவிடம் இல்லை என்பது எந்த அளவு உண்மையோ, அதே தான் தமிழகப் பண்பாடு மீட்டெடுப்பு குறித்த அக்கறையிலும் சரியான நிலைபாடு இல்லை என்பதை வறையறுக்க முடியும்.
கடந்த காலங்களில் அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டங்கள் அல்லது இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் மக்கள் போராட்டமாக மாறுகின்ற தருவாயில் அரசாங்கம் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து போராட்ட உணர்வை மழுங்கடிக்கின்ற வேலையைச் செய்திடும் என்பது தமிழக திராவிட அரசுகளின் வழக்கம். ஆனால், சல்லிக்கட்டை பாதுகாப்பதற்காக நடந்த போராட்டமானது கடந்தகால அனுபவத்தை மாற்றியுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. மெரினாவும், தமுக்கமும் போராட்டக்களத்திற்கான அடையாள சின்னங்களாக மக்கள் மனதில் குடியேறியுள்ளது.
சாதி சார்ந்த விளையாட்டாக, வட்டாரம் சார்ந்த வழக்காக சொல்லப்பட்டுவந்த வழக்கத்தை தவிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தால் தமிழகப் பண்பாடாக தலைநிமிர்ந்துள்ளது ஜல்லிக்கட்டு.
முனுமுனுப்புகளாகவே இருந்த சல்லிக்கட்டுக்கான முழக்கம் வெடித்து கிளம்பியதும், தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றியதும், அவனியாபுரத்திலும், அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் பண்பாட்டுத் திருவிழா மீண்டும் நடந்தேறியிருப்பதும் போராட்டத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கின்றன.
சாதிக்கான விளையாட்டாக பேசப்பட்ட ஜல்லிக்கட்டு தனித்தமிழ்நாடு கோரிக்கையாக தமிழ் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும் அளவிற்கு பரிணமித்ததையும், பிரிவினைவாத கோசம் எழுப்புகிறாhகள்! இந்தியாவை துண்டாட துடிக்கிறாhகள்! என்ற பேரில் ஒட்டுமொத்த போராட்டக்காரர்களையும்; இந்துத்துவ சக்திகள் தேசவிரோதிகளாக சித்தரிக்க முயன்றதையும், போராட்ட சூழலை வௌ;வேறு வடிவங்களில் திசைதிருப்ப முயன்றதையும் இந்த காகட்டத்தில் பார்க்க முடிந்தது. பீட்டா அமைப்பின் பிரதிநிதி ராதாராஜன் இலவசமாக உடலுறவு கொள்ள அழைப்புவிடுத்தால் கூட மெரினாவில் கூட்டம் கூடும் என்பதையும் அறவழிப் போராட்டத்தை சீர்குலைக்க நடந்த முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இந்த பின்னணியில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் பல்வேறு திசைதிருப்பு வேலைகளுக்கு உள்ளான சூழலில் மதத்தின் பேரில் திசைதிருப்பு வேலைகளை இந்துத்துவ சக்திகள் கையாண்ட விதத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சாதி சார்ந்ததா ஜல்லிக்கட்டு?
மருத நிலம் சார்ந்த வேளாண்குடிகள் தான் வேளாண் தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதே திணை வகை தமிழ்மரபு சொல்லும் செய்தியாகும். அதன் வழி நோக்கின் வேளாண் நிலத்தில் நிகழும் ஜல்லிக்கட்டிற்கு சாதி முகம் இல்லை என்பதை வலியுறுத்தலாம். இடைக்காலத்தில் சாதி முகம் பூசப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிபடுத்திட முடியும்.
காளையை பின்னுக்குத் தள்ளிய பசுவின் காவலர்கள்
தமிழகத்தில் 25 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த சமூக, பொருளாதார மாற்றங்கள் கலாச்சார தளத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருப்பதும், திராவிட அரசியல் சித்தாந்தம் வலுவிழந்து போயிருப்பதும், இடதுசாரி அமைப்புகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் பின்னடைவும், இதே காலகட்டத்தில் எழுந்த அடையாள அரசியல் வழிமுறையும் எண்ணற்ற தாக்கங்கங்களை உருவாக்கியிருக்கின்றன. இந்த முனையிலிருந்து தமிழகத்தில் இந்துத்துவா அரசியலை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஆராய்ந்தால், தங்களை மாற்று சக்தியாக இந்துத்துவா சக்திகள் பறைசாற்றிக் கொண்டிருப்பதை காண முடியும். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, மதமாற்ற எதிர்ப்பு நடவடிக்கை, கலவரங்கள், பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி போன்றவை மூலம் மக்களை அணிதிரட்டுகிற முயற்சியை பின்பற்றி வந்த தமிழக இந்துத்துவ சக்திகள், மத்தியில் 2014 ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக மக்கள் திரளுக்குள் நுழைந்திடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பிற்குரிய பட்டியலில் உள்ள பள்ளர் சமூக மக்களில் முன்னேறிய ஒரு பகுதியினரை (தேவேந்தரகுல வேளாளர்) இடதுஒதுக்கீடுக்கு எதிரானவர்களாக மாற்றுவதன் மூலமும், ஜாதி இந்துக்களாக உள்ள பிறமலைக்கள்ளர் சமூகத்திற்குள் நேதாஜியின் பேரில் இணைவதன் வழியே தமிழகத்தில் இந்துத்துவா அரசியலுக்கு பாதை அமைக்க முயற்சிக்கிறது சங்பரிவாரம்..
மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் தீவிரவாதிகள் கலந்துவிட்டனர், தேசவிரோத கோசங்கள் போடப்படுகின்றன. தனி தமிழ்நாடு கோசம், முஸ்லீம்கள் போராட்டத்தில் தொழுகையில் ஈடுபட்டனர், கோவையில் நடந்த போராட்டத்தில் தேசியக்கொடியை ஒரு இஸ்லாமிய இளைஞன் கிழித்துவிட்டான் என்ற வதந்தியும் கிளப்பிவிடப்பட்டது சங்பரிவாரம்.
சல்லிக்கட்டு மதச்சார்பற்ற நடவடிக்கையாகும். (இந்து, கிறித்துவர், இசுலாமியர் பங்கேற்கின்ற நிகழ்வு- ஆதாரங்கள் உள்ளது)
சல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்துத்துவா அரசியல், போராடுகின்ற மக்கள் கூட்டத்தில் நுழைந்து மாட்டுக்கறி அரசியலை நுழைந்திடுவதற்கான முயற்சியை மேற்கோண்டனர்.
சிந்து சமவெளி நாகரீகத்தின் அடையாளமான காளை, உழைப்பின் அடையாளமாக தமிழர்களால் கொண்டாடப்படுவதும், பண்பாட்டு வடிவமாக சல்லிக்கட்டு உருப்பெற்று நிற்பதும் இந்துத்துவாவின் ஒற்றைக் கலாச்சார கோசத்திற்கு எதிரானதாக இருப்பதே பி.ஜே.பி போராட்டத்தை சீர்குலைப்பதற்கு காரணமாக கொள்ள முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
2017 UGC வழிகாட்டுதல் -மேலும் ஒரு அபாயம்
21 ம் நூற்றாண்டில் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக உருவாக வேண்டும் மற்றும் கல்வித் த...
-
ஆகஸ்ட் 11, 1936 பற்றி தெரியுமா? RSS-BJP நண்பர்களே நீங்களெல்லாம் ஆங்கிலேயருக்கு சேவகம் செய்துகொண்டிருந்த போது செத்து மடிந்தாலும் பரவாயில்...
-
டெல்லியிலிருக்கின்ற திரிலோக்புரி, பவானா, ஓக்லா மஜ்னு கா தில்லா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மதவெறிக் கலவரமானது உடனடி அரசியல் ல...
-
புதிய கல்விக் கொள்கை:உயர் கல்வியில் நவீன தாராளமய கொள்கையின் மரபு இந்தியா நாடானது உலகத்திலேயே 25 வயதுக்கு குறைவான இளைஞர்களை 54 ச...