சாதியமும் மதச்சார்பின்மைக்கான யுத்தமும்
அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும். புத்தகம் திறக்கும் போதெல்லாம் வெடிக்கும். ஆனால் யாருக்கு ஆதரவாக வெடிக்கும் என்பதே கேள்விக்குறி. உலக தொழிலாளிகளின் விடுதலைக்காக பிறந்த கம்யூனிஸ்ட் அறிக்கை., ஜார் மன்னனின் கொடுங்கோலை மல்லுக்கு அழைத்த பெயர்பெற்ற தாய் நாவல், இந்திய விடுதலைக்காக ஜனித்த பத்திரிகைகள் என சமூகத்தில் நிகழ்கிற அனைத்து மாற்றத்திற்கு பின்னால் பத்திரிக்கைகளே பங்காற்றியது என்றால் அது மிகையாகாது. ஆனால் சமூகநீதிக்கெதிரான குரலாக பத்திரிகை, பதிப்பகம் செயல்படுமா ...? கேள்வி மட்டுமல்ல. கீதை என்ற பதிப்பகம் தன் வாழ்நாள் முழுதும் இந்துத்துவா கொள்கையை உயர்த்திப்பிடித்துள்ளது. இந்தியாவில் மதச்சார்பின்மை கொள்கை நிலைபெறக்கூடிய ஒன்றுதானா? என்றால் அது இல்லை என்று கூறியுள்ளது. ஒரு நாடு -தேசம் என்ற வகையில் இந்தியா மதத்திலிருந்து தன்னை துண்டித்துள்ளது என்ற அரசியல் அமைப்புச்சட்டத்தின் உண்மைத்தன்மையையே நிராகரிக்கிறது.
இந்துத்துவாவே இதயதுடிப்பு
பல்வேறு சாதனைமிக்க புத்தகங்களை எழுதியுள்ள அக்ஷ்ய முகுலின் புதிய புத்ததமான "மேக்கிங் ஆஃப் ஹிந்து இந்தியா " இந்துத்துவ நுண்ணாய்வுக்குடையின் கீழாக கீதை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்துத்துவ கொள்கையின் நுழைவு மையமாக திகழக்கூடிய கீதை பதிப்பகம் இந்தியாவில் மிகப் பழமையானதும், இந்துயிசத்தின் வலிமையான தசைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய புகழ்பெற்றதும் ஆகும். இப்பதிப்பகம் நீண்டநெடுங்காலமாகவே
தன்னை சங்பரிவாரத்தின் வெவ்வேறு கரங்களுடன் இணைத்திருக்கிறது.

கீதை பதிப்பகம் மற்றும் அதன் மாதப்பத்திரிக்கையான கல்யாண் ஆகிய இரண்டும் 1920களின் மத்தியில் கோரக்பூரில் துவக்கப்பட்டது.
இந்துத்துவகொள்ளைக்கு உயிரூட்டக்கூடிய ஏராளமான செயல்களில் தன்னை ஈடூபடுத்தியுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்புகூட இப்பதிப்பகம் 72 மில்லியன் பகவத்கீதை, துளசிதாசரின் 70 மில்லியன் ராமாயணம், இந்து சமய பெண்கள், குழந்தைகளின் அடையாளங்கள் உள்ளடங்கிய பிரதிகள் 94.8 மில்லியன் எண்ணிக்கையிலும் விற்பனை செய்திருக்கிறது. இன்றும் கூட கல்யாண் இதழின் விற்பனை 2 லட்சமாக இருக்கிறது. அதன் எதிரினையான ஆங்கில பதிப்பான கல்யாண கல்பதரு ஒரு லட்சத்திற்கும் அதிகமான அளவில் சுற்றுக்கு விடப்படுகிறது. கீதை பதிப்பகமும், கல்யாண் பத்திரிக்கையும் மார்வாரி மூலதனத்தால் நிதி பெறுகிற நிறுவனமாகும். முகுலின் புத்தகம் கீதை பதிப்பகத்தின் உரிமையாளர் ஜெய்தயாள் மற்றும் 40 ஆண்டுக்கும் மேலாக கல்யாண் இதழின் ஆசிரியராக பணியாற்றுகிற ஹனுமான் பிரஷாத் போத்தார் ஆகிய இருவரும் ஒரு மார்வாரி வணிகர் ஆன்மீகவாதியாக மாறினார்கள் என்பதை விவரிக்கிறது. கல்யாண் பத்திரிகையின் நீண்டகால ஆசிரியர் போத்தார் அதிகப்படியாக பிராமண சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள், கலைஞர்கள்,எழுத்தாளர்களுடன் தான் பணிசெய்திருக்கிறார். டால்மியாக்கள், திவேதிகள், கோயாங்கர்கள், குப்தர்கள், பிர்லாக்கள், ஜைனர்கள், சதுர்வேதிகள், முகர்ஜிகள் ஆகியோரே கீதை பதிப்பகத்தின் வரலாற்றை விவரிக்ககூடியவர்களாக அதன் செயல்பாட்டில் இருந்துள்ளனர். இந்த பனியா -பிராமண இணையானது தற்செயலாக நிகழ்ந்த விபத்து அல்ல. ஒரு இந்து தேசத்தை ஏற்படுத்த வேண்டியதற்கு தேவையான திட்டத்துடன் தான் இது ஒவ்வொன்றும் செயல்படுகிறது. சாதிய காண்ணோட்டத்திலான மதத்தை பரப்புகிற நிறுவனம் என்பது இதன் மூலம்
தெரியவருகிறது.

சாதிய-சமூக மேலாதிக்கத்திற்கான செயல்திட்டம்
19 ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் துவங்கி 20 நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர் மார்வாரிகள். பொருளாதாரத்தில் பெருத்தவர்களாக மார்வாரி சமூகம் இருந்தாலும், சமுதாயரீதியாக வைசியர்களாகவே நிலைநிறுத்தப்பட்டனர். ஆனால் பொருளாதாரத்தில் தாழ்ந்த பிராணமனர்களும், ஷத்திரியர்களும் சமூக அளவில் உயர்வாகவே மதிக்கப்பட்டனர். இந்நேரத்தில் வட இந்தியாவில் நிகழ்ந்த நிலவுடைமை சமூக வீழ்ச்சி மார்வாரிகள் புதிய ஷத்திரியர்களாக உருவாகிட வழிவகுத்தது. அதே நேரத்தில் மார்வாரிகள் தங்களுடைய வணிக நடவடிக்கைகளையும் தொடர்ந்தனர்.
மார்வாரிகள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அடையாள நெருக்கடியை பசு பாதுகாப்பு இயக்கங்களுக்கு நிதி வழங்கல், ராமாயணத்தை வெளியிட உதவியளித்தல், கோவில், பள்ளி,மருத்துவமனை கட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வழியாக உயர்ந்த சமூகநிலையினை அடைவதன் மூலமாக தீர்த்துக்கொள்ள முற்ப்பட்டனர். இதன் மற்றொரு நடவடிக்கையாக அச்சகங்களையும், பத்திரிக்கைககளையும் நிறுவுவதாகும். துவக்கத்தில் மார்வாரி சமூகத்தை சீர்திருத்துவதாக இருந்து அதன் துணை நடவடிக்கையாக இந்து தர்மத்தை உயர்த்துவதாக இருந்ததது. அத்தகைய தந்திரத்தின் அடிப்படையில்தான் அக்காலகட்டத்தில் மார்வாரி கெசட், ராஜஷ்தான் சமச்சார், மார்வரிசுதர், மார்வாரி அகர்வால் உள்ளிட்ட பத்திரிக்கைககள் துவங்கப்பட்டது.
இந்து சமூகத்தில் நிலவுகிற சத்திரிய -பிராமண முகாந்தரத்திற்கு பதில் பனியா - பிராமண. முகாந்திரத்திற்காகவே இத்தனையும் நடக்கிறது. இரு பிறப்பாளர் முறையை உயர்த்துகிற, இந்து மதத்தில் இருக்கின்ற உயர்சாதி சிறுபான்மையினரை முன்னிலைபடுத்தும் இந்துத்துவா கொள்கையை நடைமுறைபடுத்தும் நோக்கத்துடன் தான் கீதை பதிப்பகத்தின் செயல்பாடு இருக்கிறது. இந்து

கீதை பதிப்பகம் நடத்தும் அறக்கட்டளையில்
இருபிறப்பாளர்கள் எனப்படும் பிராமண- ஷத்திரிய - வைசிய சாதியினர் மட்டுமே
உறுப்பினர்களாக இருக்க முடியும். முழுக்க முழுக்க இந்து சனாதான தர்மத்தை முன்னிருத்தும் முயற்சி. "இந்துத்துவாவிற்கும்
ஜனநாயகத்திற்கும் இடையிலோ அல்லதுஇந்துத்துவாவிற்கும் சமத்துவத்திற்கும்
இடையிலோ உறவுக்கு வாய்ப்பே இல்லை என்பதை கீதா பிரஸ்சின் பக்கங்கள்
தெளிவாக உணர்த்துகின்றன .ஆனால் இந்துத்துவா எனும் வியாதியை
உருவாக்கியள்ள வைரஸான சாதி எனும் யதார்த்தத்தை உணராமல்
மதச்சார்பின்மைக்கான போரில் வெற்றிகாண இயலாது."

- தமிழில் சுருக்கம்
கே.எம்.பாரதி
ஆதாரம்: 09.09.15 தேதியிட்ட ஆங்கி ல இந்து (G.சம்பத் அவர்களின் கட்டுரை)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக